பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii;

ருக்கக் கூடிய நிலைமையையும், அங்கே பாயும் ஆறு முதலானவற்றையும், திருத்தலங்களிலே உள்ள இயற்கை அழகினையும் திருமால் நின்றும் இருந்தும், கிடந்தும், நடந்தும் உள்ள திருவுருங்களையும், திருத்தலங்களுக்கே உள்ள ஸ்தல மஹிமைகளையும், தல புராணம் கூறும் தேவர்கள் வணங்கிய பெருமைகளையும் வியந்து கூறுவ தால், இவை செவி வாயிலாக உணர்ந்து கூறிய செய்திகள் இல்லை என்பது உற்று நோக்க விளங்கும். ஒரிடத்திலேயே இருந்து திருத்தலங்களைப் பாடி இருந்தால், நாடெங்கும் பரவியுள்ள மக்கள் அப் பாடல்களைக் கேட்டு இன்புற முடியாது. எனவே, திருமால் சமயம் செழிக்க, திருத்தலங் கள்தோறும் சென்று, அங்கே கோயில் கொண்டுள்ள இறைவனைப் பாடிப் போற்றினார் என்பதற்கு இவர் பாடிய பாடல்களே சான்றாகும்,

இத்தகைய ஆழ்வாரின் திருத்தலப் பயணங்களையும் ஆழ்வார் பாடல்களின் அருமை பெருமைகளையும், நயங் களையும், பரகாலன் பைந்தமிழ் என்னும் இப் புதிய நூலின்கண் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆக்கித் தந்துள்ளார் கள். பரகாலன் பைந்தமிழ் பேராசிரியர் அவர்களது அடிமனத்தில் ஆழமாகப் படிந்து அநுபவிக்கப் பெற்று, அந்த அநுபவம் பீறிட்டுக் கொண்டு நூல் வடிவமாக அமையப் பெற்றது என்பதனை வரிகள்தோறும் உய்த் துணர முடிகிறது.

முதல் இயலில் திருமங்கை மன்னனின் பிறப்பு வளர்ப்பு, திருமணம் ஆகியவற்றை ஆசிரியர் வெகு அழ, காகக் கூறி, திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வாராக" மாறிய காரணங்களை- குறிப்பாகக் குமுதவல்லியிட்ட கட்டளையை- 'திருவிலச்சினையும், பன்னிரு திருமண் காப்பும் உடையவர்க்கொழிய மற்றவர்க்கென்னைப் பேச வொட்டேன்' என்றதை முதலில் கூறி, அவர் திருநறையூர் நம்பியிடம் அதை முறைப்படிப் பெற்று வந்தபோது: