பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சோழநாட்டுத் திருத்தலப் பயணம்

கடுநாட்டுத் திருப்பதிகளான திருக்கோவலூர், திருவயிந்திசபுரம் ஆகிய இரண்டையும் மங்களாசாசனம் செய்தருளின் பின்னர் சோழ நாட்டிலுள்ள திவ்விய தேசங்களை எல்லாம் மங்களா சாசனம் செய்யத் திருவுள்ளம் பற்றுகின்றார் ஆழ்வார். முதலில் தில்லைத் திருச்சித்தி கூடத்தில் இழிகின்றார்.

1. தில்லைச் திருச்சித்திரகூடம்: இத்திருத் தலத்திற்குப் போந்த ஆழ்வார் இரண்டு திருமொழி களால் .ே 2, 3. 3) மங்களாசாசனம் செய்கின்றார். இத்திருப்பதியின் எழிலார்ந்த சூழ்நிலை இவர் மனத்தைக் கவ்வுகின்றது. சேமங்கொள்பைம் பூண் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திர கூடம் (3. 2: 5), என்றும்,

1. சித்திரகூடம் (சிதம்பரம்) :- தென்னிந்திய இருப் பூர்தி வழியில் சிதம்புரம் நிலிையம். நிலையத்தி இருந்து திருக்கோயில் சுமார் ஒரு கி. மீ. தொலைவு. ஆதியில் இத்தலம் 'தில்லை’ (Exoecaria Agallecha Linnj" ords p &go, புதர்ச் செடிகள் நிறைந்த வனமாயிருந்தமையின் 'தில்லை' என்ற பெயர் பெற்றது. சித்திர கடம் என்பது விசித்திரமான் சிகரங்க்ள்ை ஆடையது எனப் பொருள்படும் காரணஇ): இஃது இராமபிரான் வனவாசம் செய்த காலத்து