பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩房疊 பரகாலன் பைந்தமிழ்

அடையச் செய்து சேது.கட்டியவன் (6), இலங்கை நகரை ஒரம்பால் அழித்தவன் (6): பிரகலாதாழ்வான் பொருட்டு நரசிம்ம உருவத்துடன் தோன்றி அவன் தந்தை இரணியனை அழித்தவன் (8). இத்தகைய எம்பெருமான் தான் சித்திர கூடத்தில் எழுந்தயிருளிருப்பவன் என்கின் றார் ஆழ்வார்.

கிருட்டிாைவதாரத்திலும் அதிகமாக இழிந்து அவ் வேதாரத்தில் நிகழ்ந்த பல அற்புதச் செயல்களை தினைந்து போற்றுகின்றார் ஆழ்வார். இங்கு எழுந்தருளி விருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? நப்பின்னைப் பிராட்டிக்கும் பெரிய பிராட்டிக்கும் கொழுநன்; குதிரை வடிவாக வந்த கேசி என்னும் அசுரனின் வாயைப் பிளந்து கோன்றவன்; குன்றம் ஏந்தி ஆயர்களைக் கல்மாரியி வின்தும் காத்தவன் (8.2:7,8, 3.3:1). இரட்டை மருத மரங்களிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளிள வன்; கோவர்த்தன மலையைக் கொற்றக் கொடையாக எடுத்து ஆயர்கட்கும் ஆநிரைகட்கும் வந்த துன்பத்தைக் காத்தவன்; அழகிய பெண்ணுருவாய் வந்து நஞ்சு திற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயன்ற பூதனையின் உயிர் குடித்தவன்; அறியாதார்க்கு ஆனாய ாைகிப் போய் ஆய்ப்பாடி, உறியார் நறுவெண்ணெய் உண்டு உகந்தவன், நப்பின்னையின்பொருட்டு ஏழு கொல்லேறுகனைத் தொலைத்துத் திருவாய்ப் பாடியின் தெருவில் கூத்தாடியவன்; குவலயாபீடம் என்னும் களிற்றின் கொம்புகளிரண்டையும் சேற்றிலிருந்து முன்னங்கியைப் பிடுங்குவதுபோல் பிடுங்கி அவற்றையே ஆயுதமாகக் கொண்டு களிற்றினையும் பாகனையும் யமலோகத்திற்கு அனுப்பினவன் (3.3:1-7). இத்தகைய எம்பெருமான் பின்னானார் வணங்கும் சோதியாக’, கோவிந்தராசனாக, திருத்தில்லையில் கோயில் கொண்டி ருப்பதாக ஆழ்வார் அதுசந்தித்து அகமகிழ்கின்றார்.