பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 荔岳

கண்ணார் கண்ணபுரம்

கடிகை கடிகமழும் தண்ணார் தாமரைசூழ்

தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாண்மதியை

விரிக்கின்ற வெண்சுடரைக் கண்ணாரக் கண்டுகொண்டு

களிக்கின்றதிங் கென்று கோலோ’

[கண்ஆர்-அழகிய; கடி-மணம்; விண்ணோர்நித்திய சூரிகள்; வெம்சுடர்-சூரியன், ஆர. நிறைவு பெறும் அளவு)

என்பது பாசுரம், "நறு மணமும் குளிர்ச்சியும் பொருந்திய தாமரை மலர்களால் சூழப்பெற்ற தலைச்சங்காட்டில் மேல்திசையில் நித்திய சூரிகட்கு எந்நாளும் அநுபவிக்கத் தக்கவனான எம்பெருமான் இந்நில உலகில் எல்லோரும் வணங்கும்படி எளிதில் கிட்டுபவன் ஆனான். உதய காலத்தில் விரியும் சூரியனைப்போல் மிக்கவனான அவனை இந்நிலத்தில் கண்கள் நிறைவு பெறும் அளவும் கண்டு களிப்பெய்துவது என்றைக்கோ?' என்று கூறிப் பெருமகிழ்ச்சி அடைகின்றார். அழுந்துTர் நின்ற அஞ்சனக் குன்றத்தை'ச் சேவிக்கத் திருவுள்ளம் கொள்ளு கின்றார் ஆழ்வார்.

给。 திருவழுத்துனர்' : திருமங்கை யாழ்வார் மட்டிலுமே இத்தலத்து எம்பெருமானை நான்கு பதிகங்க

12. பெரி. திரு. 8.9:9

13. திருவழுந்துணர் : இத்திருத்தலம் விழுப்புரம் கடலூர் "திருச்சி தென்னிந்திய இருப்பூர்திப் பாதையில் உள்ளது. நிலையத்தில் மெயில் எக்ஸ்பிரஸ் வண்டிகள் நிற்கா. மயிலாடுதுறை யில் இறங்கி நல்லதெர்ரு விடுதியில் தங்கி