பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 187

வற்றைப் புரட்டி அடித்துக்கொண்டு வரும். இவை கழனிகளில் நீர் மடைவழியாகப் பாய்தலினால் மிக்க வளத்தையுண்டாக்கிப் பெருஞ்சிறப் பெய்தும் திருவழுத் துார். தான் பெருகும்பொழுது பொன்னைக் கொழித்துக் கொண்டு (செம்மண்ணைக் கரைத்துக் கொண்டு) (செம் மண் வண்டல் பயிர்கட்கு நல்லது) வருதலால் காவிரி பொன்னி' என்ற திருநாமம் பெற்றது. எம்பெருமான் பெருந்துயரத்தினால் வருந்துகின்ற அன்பருள்ள இடங் களில் சென்று பாதுகாப்பது போலவே, இக்காவிரியின் வெள்ளமும் வேண்டும் இடங்களிலெல்லாம் வந்து பரவும் என்ற நயந்தோன்றுமாறு அருளிச் செய்துள்ளார் ஆழ்வார் என்பதையும் சிந்திக்கின்றோம்.

இயற்கைச் சூழ்நிலை : இத் தி ரு த் த ல த் து இயற்கைச் சூழ்நிலை ஆழ்வார் சிந்தையைக் கவர்ந்ததால் அவரது மங்களாசாசனப் பாசுரங்களில் இதனைக் கண்டு மகிழ முடிகின்றது. அரச சின்னமாகிய வெண்சாமரை வீசவும், வாத்தியங்கள் ஒலிக்கவும், ஒரரசன் தன் பட்டத்து அரசியுடன் சீரிய சிங்காதனத்தின்மீது வீற்றிருத் தல் போல, இத்திருப்பதியில் செந்நெற்பயிராகிய சாமரைகள் வீசவும், சங்கங்கள் முழங்கவும் அன்னப் பறவைகள் தமது பேடைகளுடன் செந்தாமரை மலர் களில் ஏறி வீற்றிருக்கும் (7.8:2). மற்றும், தாமரைப் பூக்களின்மேல் வரி வண்டுகள் இசையிடா நிற்க அத்த இசைக்கேற்ப அன்னப் பறவைகள் தம் பேடையுடன் சேர்ந்து நடனம் ஆடும் (7. 5: 9). இவ்வூரைச் சுற்றிலு முள்ள வயல்களில் நெல்லுக்குக் களையாக முளைத்த குவளைப் பூக்கள் மாதர்களின் கண்களையொத்திருக்கும்; நீர் நிலைகளில் உண்டான ஆம்பல் மலர்கள் அவர்களது வாய் போன்று விளங்கும்; இதழ்மிக்க தாமரைப் பூக்கள் அவர்களது முகம் போன்று திகழும் (7.5:16). வயல்களில் உள்ள பாக்கு மரங்களில் முதிர்ந்த பழங்கள் பவளத்தை அபும், பசுங்காய்கள் மரகதத்தையும், விரிந்த பாளைகள்