பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 191

மறையோ துவதால் எழும் ஒலி எப்போதும் கடல் ஒலி போல் ஒலித்துக் கொண்டேயிருக்கும் (7.5:8). இவ்வூர் அந்தணர்களின் தன்மையை,

எங்கும்மலி நிறைபுகழ்நாள்

வேதப் ஐந்து

வேள்விகளும் கேள்விகளும்

இயன்ற தன்மை

அங்கமலத்து அயன் அணையார் (7.8:1)

(வேள்வி-யாகம்; கேள்வி-நூற்கேள்வி, கமலம்

தாமரை, அயன்-நான்முகன்;

என்று எடுத்துக்காட்டுவர் ஆழ்வார்.

"செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்; திசை முகனை அனையவர்கள் செம்மைமிக்க அந்தணர்கள்' (7.8:7) என்று இவர்களைச் சிறப்பித்துப் பேசுவர். மண்டபம் முதலிய எல்லா இடங்களிலும் வேதம் ஒதிய அந்தணர்கள் நிறைந்து காணப் பெறுவர் (7.8:6).

தலத்து எம்பெருமான்: இத்தகைய சிறந்த சூழ் நிலையில் அமைந்த சிறப்புமிக்க திருவழுந்துளரின் மேற்குப் பகுதியில் திகழ்வது பெருமாள் கோயில். இந்த இருப்பிடத்தை வலியுறுத்துவதுபோல், ஒருமுறைக்கு ஒன்பது முறையாக,

அழுந்துார் மேல்திசை

நின்ற அம்மானே

என்று ஒரு திருமொழியிலும் (7. 7)

அணி அழுந்துார்

நின்று உகந்த அமரர் கோவே