பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 3 13

கண்ணார் கடல் சூழ் (1:10:1) என்றும், இத்திருமொழி 'கண்ணார் கடல் போல்" (4:7:1) என்றும் தொடங்கப் பெற்றிருத்தலைக் காணலாம். பாசுரங்களின் நடைப் போக்கும் கருத்துப் போக்கும் ஒருவிதமாக இருத்தலையும் ஒப்பிட்டு உணர்ந்து மகிழலாம். இது காரணமாகவே

இத்திருத்தலம் தென் திருப்பதி' என்று வழங்குகின்றது. போலும்.'

எம்பெருமானை வேண்டுவது: திருவெள்ளக் குளத்து எம்பெருமானை நோக்கி ஆழ்வார் வேண்டுவது 'திருவெள்ளக் குளத்து எம்பெருமானே, கடல் போன்ற திருமேனியையுடையனாயிருப்பது சம்சாரத்தில் கொதிப் படைந்து கிடக்கும் எம்போலியருடைய தாபங்களைத் தனிப்பதற்கன்றோ? அப்படியிருந்தும் அடியேனுடைய தாயங்களை இன்னமும் அகற்றாமலிருப்பது என்னோ?(!). சர்வ ரட்சகன் என்பது விளங்கவன்றோ நீ திருத்துளாய் மாலையை அணிந்திருப்பது? நீ என் இடரை நோக்கா தொழியில் துளபமாலை அணிந்திருப்பது பயனற்றதாகு மல்லவா? (2) போவார் வருவாரெல்லாம் கையெடுத்து வணங்கும் படியாக எளியனாக உள்ளாய். இந்திரன் பசிக் கோபத்தினால் ஏழுநாள் இடைவிடாது மழை பெய்வித்த போது கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்துத் திருவாய்ப்பாடியின் இடரை நீக்கியனவனன்றோ நீ? (3).

'நீ குவலயாபீடம் என்னும் யானையின் கொம்பு களை முறித்தாய் (4) பிராட்டிக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்தாய்; மலைகளைக் கொண்டு சேது அமைக்கச் செய்தாய் (6). சங்கல்பமாத்திரத்தாலேயே படைப்பு அழிப்புகளைச் செய்து தலைக்கட்டவல்லவன் 10. கும்பகோணத்திற்கருகிலுள்ள ஒப்பிலியப்பன் சக்கி தியும் (திருவிண்ணிகர்) நாக்ர்கோயிலுக்கருகி லுள்ள திருவண்பரிசாரமும் தென் திருப்பதி என்று வழங்குதலும் உண்டு.