பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 229

செண்பக மரங்களின் கூட்டமும் நிறைந்துள்ளன. இச் சோலைகளில்; மாமரங்களும் வாழை மரங்களும் செறிந் துள்ளன (1). சோலைகளில் கூத்தும் பாட்டும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேகமுழக்கம் கேட்கப் பெறுங்கால் மயில்கள் தம் தோகைகளை விரித்துக் கூத்தாடுகின் றன; மயில்களின் நடனத்திற்கேற்ப வண்டுகள் இசையொலியை எழுப்புகின்றன. (3). பல இடங்களில் கருப்பஞ் சோலை கள் காணப்பெறுகின்றன: எம்மருங்கும் கழனிகளில் செந். நெற் பயிர்கள் ஒங்கி வளர்ந்துள்ளன. நடைபாதையின் அருகிலுள்ள பொய்கைகள் சோலைகள் சூழ்ந்து காணப் பெறுகின்றன (4). திருநாங்கூருக்கும் ஊரைச் சூழ்ந்துள்ன. வயலுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலை. வயலில் வளர்ந்துள்ள கோங்கு மரங்களின் அரும்புகளை நோக்கின் அவை அவ்வூர்ப் பெண்களின் கொங்கைகள் போல் தோற். நம் அளிக்கின்றன. அங்கு மலர்ந்திருக்கும் அரக்கலாம்பல் மலர்களை நோக்கின். அவை அவ்வூர் மகளிரின் செவ்விதழ் களை நினைவூட்டுகின்றன. செவ்வி பெற மலர்ந்த செந் தாமரைப் பூக்களை நோக்கின், அவை அவ்வூர் மங்கை யரின் முகங்களாகத் தோற்றம் அளிக்கின்றன (6). பாக்குச் சோலைகளின் நடுவே தென்னை மரங்கள் ஓங்கி வளர்த் துள்ளன; அவற்றினின்றும் முதிர்ந்து பெருத்த காய்கள் இற்றுக் குளங்களில் விழுகின்றன; இவற்றின் பேரொலி யைக் கேட்ட மீன்கள் தங்களை இரையாக்கிக் கொள் வதற்கு ஏதோ ஒன்று நீரில் குதித்துவிட்டது என்று வேறி டம் தேடித் துள்ளித் தாவுகின்றன. எம்பெருமானிடத் தில் காரணமின்றிப் பயந்து கலங்கும் பரிவுடையவர்களின்

கொண்டனர் போலும், இங்குள்ள உற்சவர் பேரெழில் மிக்கவர். திருந்ாங்கூர்த் திருப்பதி யில் இஃது ஐந்தாவதாகும். பெரி. திரு. 4. 2 (பதிகம்). ம்ேலும் விவரம் வேண்டுவோர் சோ. கா. தி. (2) கட்டுரை 9 காண்க.