பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔影 பரகாலன் பைந்தமிழ்

(?). தேவேந்திரனுக்குப் பலியிட வேண்டுமென்று இடை பர்கள் சமைத்த சோற்றை முழுவதும் திருவமுது செய் தவன: கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்து ஆநிரைகளைக் கல் மாரியினின்றும் காத்தவன் (3). குவி லயாபீடம் என்ற யானையின் கொம்புகளைப் பறித்து, அந்த யானையினையும் அதன் பாகனையும் கொன்றொ ழித்தவன்; அரண்மனையினுள் புகுந்து சானுரன் முஷ்டி கன் என்ற மல்லர்களை ஒருசேர முடித்தவன்; அதன் பிறகு, கம்சனை அரியணையின் மீதிருந்து தள்ளி அவனையும் உதைத்துத் தள்ளி உயிர் குடித்தவன் (4). சக்கரத்தில் ஆவேசித்துத் தன்னைக் கொல்லக் காத்திருந்த சகடா சுரனை அச்சக்கரத்தை உந்தித் தள்ளி அவனை வானுல கிற்கு அனுப்பிய கோமான்; பானாசுரனுக்குத் துணை யாக வந்த உருத்திரனை அவன் சேனைகளோடும் சுற்றத் தாரோடும் தோற்றோடச் செய்து அவன் ஆயிரத் தோள் களையும் துணித்தொழித்த பெருமான் (5).

மாவலியிடம் மூவடிமண் நீரேற்றுப் பெற்று திருக் கையில் நீர் விழுந்தவுடன் ஓங்கி உலகளத்த உத்தமன்; இவன் திருவடி நான்முகன் உலகளவும் செல்லும்போது நான்முகன் அத்திருவடியை மலரிட்டு வணங்கித் துதிக்க வும் அத்திருவடியினின்றும் கங்கை நீர் பெருகும்படியாக வும் செய்த வித்தகன் (6). அச்சம் என்பதை ஒருநாளும் கனவிலும் கண்டறியாத பெருமிடுக்கனான இரணியனின் நெஞ்சு உறையும்படியாக அவனது மார்பை இரு பிளவாகப் பிளந்து குருதி வெள்ளத்தைப் பெருக்கின தரசிம்மனும் இவனே; கம்சனது ஏவலினால் குதிரை வடிவம் கொண்டு தன்னைக் கொல்லும் பொருட்டு: வந்த கேசி என்னும் அசுரனைக் கொன்றொழித்தவனும் இந்த எம்பெருமானே (7). சிவனது சாபந் தீரப் பிட்சை அளித்த பெருமான்; நம்முடைய பாவங்களையும் தொலைக்க வேண்டியே ஈண்டு எழுந்தருளியிருப்பவன்