பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 23 క్రి

வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு நஞ்சு தீற்றிய முலை கொடுக்க வந்த பூதனையின் உயிர் குடித்தவன் (2). திருவாய்ப்பாடியிலுள்ள சிறுகுடில்களில் தந்திரமாக துழைந்து வெண்ணெயை வாரியுண்பதும்,

மச்சொடு மாளிகை ஏறி

மாதர்கள் தம்இடம் புக்கு

கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி

நிச்சலும் தீமைகள் *

{மச்சு - நடுநிலை; மாளிகை - மேல்நிலை; கச்சு - முலைக்கச்சு, பட்டு - பட்டை; காம்பு துகில் - கரைகட்டின சேலை; கீறி - கிழித்து: நிச்சலும் - நாடோறும்!

என்று பெரியாழ்வார் கூறுவதுபோல் மகளிரிடத்தில் சில தீம்புகளைச் செய்வதுமாய் இங்ங்ணம் திருவாய்ப் பாடி முழுவதும் நலிவுபடுத்திய கண்ணனே இத்திருத் தலத்தில் எழுந்தருளியிருப்பவன் (3). முன்பொருகால் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம் புரிவதற்குக் கன்யாசுல்கமாக வைக்கப் பெற்றிருந்த ஏழு காளைகளை அடக்கி அப்பிராட்டியை மணம் புரிந்தவன் (4). பெரிய பிராட்டியாரோடும் பின்னைப் பிராட்டியாரோடும் நித்தமும் கலவி புரிந்தும் இளமை மாறாத பெருமான் (5). 'இராமன் என்ற ஒரு சிறு பயல் பூமியை எல்லாம் ஆள்பவனாக நினைத்து அகங்காரப்படுகின்றான்; அதை அறிந்தும் அவனைத் தண்டியாமல் பொறுத்திருப்பான் அரக்கர்கட்குத் தலைவனாவனோ? என்று கிளர்ந் தெழுந்த இராவணனது மலை போன்ற இருபது தோள் களையும் ஒரே சமயத்தில் அறுத்தொழித்த தனி வீரன் (6). மாணி நிலைக்கு உரிய கோலத்துடன் . வாமன

18. பெரியாழ் திரு 2.7:3