பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்

அம்மகளிரின் முகம்போலக் காட்சி யளிக்கும். எனவே, உள்வீதிகட்கும் வெளி நிலங்கட்கும் வேறுபாடு தெரிவரிய தாக இருக்கும். இவ்வூர்ப் பெண்கள் கிளிப் பிள்ளை கட்குப் பேசும் பயிற்சி தருவதை "கிளிமடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்”. (8) என்று காட்டுவர்.

ஊரின் நிலை: ஊர் எப்படிப் பட்டது? திருவிற் பொலி மறையோர் வாழும் ஊராகும் சிறு புலியூர், ஒமத் தீயை வளர்க்கும் மறையோர் வாழும் ஊராகும் (2, 7). அக்காலத்தில் வேதம் ஒதி வேள்வி வளர்க்கும் அந்தணா ளர் வாழ்ந்த ஊராக இருந்தது என்பதை ஆழ்வார் இந்த இரண்டு பாசுரங்களில் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இப்பொழுது அத்தகையோர் அங்கு மருந்துக்கும் கிடைப் பதில்லை. ஊர் சிறிய ஊராயினும் தேவையான ஒரு சில பொருள்கள் விற்கும் அங்காடிகள் உள்ளன.

இத் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் இணையடிகளன்றி வேறொன்றையும் அறியாதவர் திருமங்கையாழ்வார்.

பறையும் வினை; தொழுதுய்ம்மின், நீர்

பணியும் சிறு தொண்டீர்!

புலியூர்ச்சல சயனத்து உறையும் இறை அடியல்லது

ஒன்று இறையும் அறியேனே (3). (பறையும்-தொலைந்து போம்; வினை - பாவங் கள்; சிறு தொண் டீர்-கீழானவற்றில் தொண்டு பட்டுத்திரிகின்றவர்களே; ஒன்று-வேறொன்று: இறையும் - சிறிதும்).

இவ்வாறு தகுதியற்றவர்களைப் பணிந்து திரிகின்றவர் களை நோக்கி, சிறு புலியூர்ச் சலசயனத்தைத் தொழுது