பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 2.47

சேயொங்குதண் திருமாலிருஞ்

சோலைமலை உறையும் மாயா! எனக் குரையாய் இது:

மறைநான்கின் உளாயோ? தீஒம்புகை மதையோர் சிறு

புலியூர்ச்சல சயனத்தாயோ? உனது அடியார்மனத்

தாயோ? அறியேனே (7).

சேயோங்கு-மிக உயர்த்த; தண்-குளிர்ந்த: உறை யும்-வசிக்கும்; மறை-வேதம்; தீ-ஓமத் தீ; ஒம்பும்வளர்க்கும்; மறையோர்-வேதியர்)

என்பது ஆழ்வார் பாகரம். 'எம்பெருமானே! அடியே லுக்கு ஒர் ஐயம்; நீ நான்மறையில் உள்ளாயா? நினது அடியார்களின் நெஞ்சில் உள்ளாயா? நீ இன்ன இடத்தில் உள்ளாய் என்பதை அடியேனால் அறியக் கூடவில்லை. நீயே நின் சோதிவாய் திறந்து அருளிச் செய்தருள் வாயாக!' என்கின்றார்.

பெரிய பிராட்டியார் மார்பில் உறையும் எம்பெருமா னிடம் ஆழ்வார் சரண்புகுகின்றார்.

கருமாமுகி லுருவா! கனல்

உருவா: புனல் உருவா! பெருமால்வரை உருவா! பிற

உருவா! நின துருவா!' திருமாமகள் மருவும்.சிறு

புலியூர்ச்சல சயனத்து அருமாகடல் அமுதே! உனது அடியேசரண் ஆமே (9)

1.மா-பெரிய முகில்-மேகம்; உருவா-உருவமுடை யவனே கனல்-நெருப்பு: புனல்-நீர் மால்வரை