பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 257

"இவருடைய திருக்கண்களின் அழகுதான் என்னே! தாமரைக் கண்ணன் என்னலாம்படித் தோன்றுகின்றார். -ஒங்கிப் பரந்த மலைகள் போலே திகழ்கின்றனவாய்த் தோள் வளைகள் முதலியவற்றின் புகர் விஞ்சி விளங்கப் பெற்றவையான ஆயிரம் திருத்தோள்களும் அவயவந் தோறும் திருவாபரணங்களும் பொலிந்து நிற்கும் அழகைத்தான் என் சொல்லுவேன்: அலங்காரமும் வேண் டாத வடிவு தானே அமையாதோ என்னலாம் படியான அழகு அமைந்திருப்பதுதான் என்னே! இவ்வழகை நோக்குங்கால் இவர் திருமெய்யத்தில் எழுந்தருளியிருப் பவர் போலவும் தாவி உலகையெல்லாம் அளந்தவர் போலவும் தோன்றுகின்றார் (3).

"அவருடைய பரத்துவ செளலப்பியங்களைக் கூறு கின்றேன், கேளாய். மணங்கமழும் திருத்துழாய் மாலை களைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளில் திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாப் போலே ஏந்தி யுள்ளார்; இப்படிப்பட்ட பாத்துவம் கொண்டிருந்தும், எட்டாதவராக இராமல் தாமிருக்குமிடத்திலேயே வந்து புகுந்துள்ளார்: பரமரசிகர். இளமை ததும்பும் பருவ முடையவராகத் திகழ்கின்றார். இவருடைய வாயிதழ்கள் திருப்பவளம் போலிரா நின்றன; திருவுருவமோ செம் பவளத் திரள்போலே விரும்பத் தகுந்ததாக இரா நின்றது. இங்ங்ணம் உவமையில்லாதவரை உவமை யிட்டுச் சொல்லுவதும் சரியன்று என்னும்படி பேரழ குடையவர் (A).

'உறையூரையும் தென்மதுரையையும் இருப்பிட மாகக் கொண்டு காட்சிதரும் கோபால கிருட்டிணன் போன்றவர்; மலை போன்ற திண்ணிய நான்கு திருத் தோள்களையுடையவராகச் காட்சி தருகின்றார். இவ ருடைய திருமேனியின் தோற்றம் கருங்கடலையொத்துள்

ப. க.-17