பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感感墨 பரகாலன் பைந்தமிழ்:

கொளி போன்ற சுய ஒளியையுடையவன்; பூமிபோன்ற பொறுமையுடையவன்; ம ைல பே ா ல் அசைக்க வொண்ணாதவன்; வேண்டுமிடங்கட்கு வருவித்துக் கொள்ளவல்ல அலைநீரினைப் போன்றவன்; அடியவரிடத் துப் பேரவாக் கொண்டவன்; சிறந்த ஞானவன்; வைதிகர்கட்குக் கண்போன்றிருப்பவன் (9)”. இப்படிப் பட்ட எம்பெருமானைக் கண்ணமங்கையில் கண்டு கொண்டதாகக் களிப்பெய்துகின்றார் ஆழ்வார்.

திருமொழியை ஒதுவதன் பயன் நலம் அந்தம் இல்லதோர் நாடாகிய திருநாட்டிற்குச் சென்று காண வேண்டிய பரமபுருடனான - புருடோத்தமனை - இந்த நிலத்தில், திருக்கண்ணமங்கையில் காணப்பெற்றேன்' என்று ஆவலுடன் அருளிச் செய்த திருமொழியை நன்கு ஓதி உணர்பவர்கள் விண்ணுலகில் தேவர்களாய்த் திகழ் வர் என்று பயன் உரைத்துக் தலைக்கட்டுகின்றார் ஆழ்வார். எம்பெருமானை நோக்கியும் பேசுகின்றார்.

"வெண் சங்கம் ஒன்(று) ஏந்திய கண்ண! நின்தனக் கும்.குறிப் பாகில்

கற்க லாம்கவி யின்பொருள் தானே (10)

என்பது ஆழ்வார் வாக்கு. "வெண் சங்கம் ஏந்திய கண்ணனே, உனக்கும் இத் திருமொழியில் ஆதரம் உண்டாகில் எனக்குச் சீடனாகவிருந்து கற்க வேண்டுங் காண்!” என்கின்றார். அவ்வளவு சீரிய குடிகொண்டதாம் இத்திருமொழி என்பது ஆழ்வாரின் திருவுள்ளம். இதன் சொல்லின்பமும் பொருளின்பமும் எம்பெருமானையும் வணங்கப்பண்ணி ஈடுபடுத்தும் என்பது குறிப்பு. ஒரு வளிட்டன்பாடே ஸ்ாந்தீபினிபாடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்குத் திருமங்கையாழ்வார் பாடே அதிகரிக்கை தாழ்வோ?’ என்பது பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானக் குறிப்பு.