பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 267

கள் நெய்தல் மலர்களிலுள்ள மதுவைப் பருகித் தாமரைப் பூவைப் படுக்கையாகக் கொண்டு அதிலே போய்ப் படுத் துறங்கும் (6. 5: 6), மெல்லிய பூக்களின்மீதுள்ள வண்டு கள் களித்துத் தேனைப் பருகி திற்கும்; அழகிய தென்றல் மலர்களை வீசி இறைக்கும்; முல்லை மலர்கள் முறுவலிப் பன போன்று மலரும் (6. 7: 4),

பள்ளிக் கமலத் திடைபட்ட

பகுவாய் அலவன் முகம் நோக்கி, நள்ளி ஊடும் வயல் (6. 7: 6),

என்பதில் ஒரு புறத்தில் மலர்ந்த தாமரை மலர்களும் மற்றொரு புறத்தில் கூம்பியிருக்கும் ஆம்பல் மலர்களும் விளங்கப் பெற்ற வயலை வருணிக்கும் பாசுரம் இது."

நிலவனத்தைப்பற்றிப் பேசிய ஆழ்வார் நறையூர் நீர் வளத்தையும் குறிப்பிடுவர். இப்பகுதியைப் பொன்னி எனப்படும் காவிரி நதி பாய்ந்து வளமாக்குகின்றது அந் நதி கழனிகளின் வரப்புகளின்மீது மலைப் பகுதிகளி லுள்ள இரத்தினங்களைக் கொணர்ந்து சிதறித் தள்ளுகின் நது. அவற்றுடன் சந்தனக் கட்டைகளையும் அகிற் கட்டைகளையும் எவரும் எடுத்துக் கொள்ளும்படியாகக் கொண்டுவந்து தள்ளுகின்றது. (6. 6:2,5,7); பொன்களை யும் முத்துகளையும் குளிர்ந்த அலைகளின் மூலமாகக் கொழிக்கின்றது. (6.9:6); நறையூரின் அருகிலுள்ள நிலத்தில் கரும்பும் செந்நெலும் போட்டி போட்டு வளர்ந்து பயன்தருகின்றன (6.6.7); நறையூர்ச் சோலை

12. இதன் ஆழ்பொருளை பராசரப்பட்டர் விளக்கிய பாங்கையும், திருநறையூர் எழும்பிய வினாவிற்குப் பட்டர் கூறிய் விட்ையும் சுவைக் கத்தக்கவை. (சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி பக். 133 - 134 காண்க.)