பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 器莎姆

றது' என்று உலக வடிவமாக இருக்கும் நிலைமையை உருவகத்தாலே அநுபவிக்கின்றார் ஆழ்வார். இத்திரு மேனி இன்னொரு பாசுரத்தில்,

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இருநிலனும்

ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி

நின்ற அம்மானார் (6. 10:7)

fவரை-மலை; இருநிலம்-பரந்த பூமி, ஒன்றும்

சிறிதும்; ஒழியாவண்ணம்-பாழாகாதபடி).

என்று காட்டப் பெறுகின்றது. அசித்தும் இறைவன் திரு மேனியாகவுள்ளது என்ற வைணவ தத்துவத்தின் சரீரசரீரி பாவனை ஈண்டுக் காட்டப் பெறுகின்றது. இங்ங்ணம் பரத்துவநிலையிலுள்ள எம்பெருமானே நறையூர் நின்ற நம்பியாக உள்ளான் என்பது ஆழ்வார் கருத்தாகும்.

அடுத்து, எம்பெருமானின் அவதாரச் செயல்களில் இழிகின்றார் ஆழ்வார். கடலைக் கடந்து தேவர்கட்கு அமுதம் ஈந்தருளியவன்; பரம பாகவதனான பிரகலாதாழ் வானுக்கு நேர்ந்த இடர்களைப் பொறுக்கமாட்டாது நரசிங்க மூர்த்தியாகத் தூணில் தோன்றி இரணியனின் முரட்டுமார்பைத் திருநகங்களால் பிளந்தெறிந்த புனிதன், மச்சாவதாரம் எடுத்து ஹயக்கிரீவன் அபகரித்துச் சென்ற திருமறைகளை மீட்டு நான்முகனிடம் அளித்தவன்; பரசு ராமனாக அவதரித்து rத்திரியர்களை இருபத்தொரு தலைமுறையாக ஒழித்த திருத்தோளன்; வாணனின் ஆயிரந்தோள்களாகிய காட்டை அறுத்துத் திருவுள்ளம் உகந்தவன்; வாமன மானியாகவந்து மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்று, திரிவிக்கிரமனாக வளர்ந்து மூவுல கங்களையும் தனதாக்கிக்கொண்டவன்.