பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$76 பரகாலன் பைந்தமிழ்

தன்னுருவம் ஆகும் அறியாமல் தான் அங்கோர் மன்னும் குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன் இயலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்

வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி "என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் மன்னா: தரு’கென்று வாய்திறப்ப மற்றவனும்

என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண் தடவ மேலேடுத்த பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்

கடந்து அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி மன்னில் அகலிடத்தை மாவலியை வஞ்சித்து தன்னுலகம் ஆக்குவித்த தாளானை'

-பெரி. திரு. மடல் 50-61

என்று இச்செயலை அற்புதமாகக் காட்டுவர்.

இந்த எம்பெருமான் இராவணனைத் தொலைத்து வீடணனுக்கு இலங்கையரசை நல்கியவன்; வராக அவதா ரம் எடுத்துப் பூமியை அண்ட பித்தியினின்றும் விடுவித் தெடுத்த பெருமான், கிருட்டிணாவதாரத்தில் இந்த ஆழ்வாருக்கு மிக்க ஈடுபாடு உண்டு. ஆகவே அந்த அவதாரத்தைப் பல்வேறு நிலைகளில் அநுசந்தித்து அகம் மிக மகிழ்கின்றார். உறியார்ந்த வெண்ணெய் உண்டு உரலில் கட்டுண்டல், ஏழ்விடையை வென்று பின்னையை மணத்தல், பூதனையிடம் பாலுண்ணும் வியாஜத்தால் அவள் உயிரையும் உண்ணல், இரட்டை மருத மரங்களைக் சாய்த்தல், பார்த்தனுக்குத் தேரூர்ந்து பாரதப் போரை நடத்துதல், குவலயாபீடம் என்ற யானையை முடித்தல், மல்லர்களை மாய்த்தல், கன்றுகள் மேய்த்துக் குழலூது தல், காளியனை அடக்குதல், கஞ்சனை மாய்த்தல் கோவர்த்தனத்தைக் குடையாக எடுத்துக்கல்மாரி காத்தல்,