பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXX、

ஏற்பட்டது எனில் மற்றவர்களுக்கு இந்நூல் திருத்தப்பலப் பயணத்தில் ஆழ்ந்த ருசியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இதுகாறும் பூரீவைஷ்ணவ உலகில் 'பரகாலன் பைந்தமிழ் பற்றிய இம் மாதிரியான அரிய பெரிய நூல் வெளிவந்தது இல்லை. திருமங்கை ஆழ்வார் பனுவல் களின் எல்லா நலனகளையும் வியாக்யானங்கள், இரஹசிய நூல்கள், சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், கம்ப ராமாயணம் ஆகிய நூல்களின் உதவி கொண்டு பூரண மாக ஆய்வு செய்து, 341 பக்கங்களில் திருத்தலப்பயண அநுபவங்களையும், 218 பக்கங்களில் பரகாலன் பனுவல் களின் தத்துவங்களையும் மிக எளிய முறையில் படைத் துள்ளது பேராசிரியர் அவர்களின் அரிய சாதனையாகும். இந்நூல் பேராசிரியர் அவர்களின் 96 வது வெற்றி நூல். இந்நூலைத் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு வரவேற்கக் கடமைப்பட்டுள்ளது'. அரும்பாடுபட்டு, ஒரு குழுவாக எழுதக் கூடிய இந் நூலினை, உழைப்பின் உருவமாய்த் திகழும் பேராசிரியர் அவர்கள் தாம் ஒருவராகவே எழுதிப் படைத்துள்ளது அவரது அயராத ஊக்கத்தையும் பரந்த உள்ளத்தையும் காலத்தைப், பொன் போன்று போற்றி, பிறர்க்காகவே வாழ்வதையும் எடுத்துக்காட்டு கின்றது. இத்தகைய உயர் குணச் செம்மல் ஆக்கிய இந் நூலுக்கு அணிந்துரை எழுதப் பணிந்த பேராசிரியருக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும், வணக்கத்தையும், ந ன் றி யி ைன யு ம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வைணவம், வளர்க வைணவ நூல்கள்.

அன்பன், * . . . * * * * A. W. ரங்காசாரி தில்லைத் திருச்சித்ரகூடம்

14-12-92