பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 287

திருப்பெயர் காதன் கோயில் என்று வழங்கியிருக்க வேண்டும். பாசுரங்கள்தோறும் நந்திபுர விண்ண கரத்தை நாடுமாறு மனத்தை ஆற்றுப்படுத்துகின்றார் ஆழ்வார்.

தலத்துச் சூழ்நிலை : பாசுரங்களின் முற்பகுதி எம்பெருமானைப் பற்றியும் பிற்பகுதி திருத்தலச் சூழல், சிறப்பு இவைபற்றியும் பேசுகின்றன. திருத்தலச் சூழ்நிலை : கரிய அழகிய வண்டுகள் தம் இனங்களுடன் மதுவினைப் பருகியூக்களைக் கோதி அதன் பிறகு களிப் புக்குப் போக்கு வீடாக இசை பாடப் பெற்ற சோலைகள் நிறைந்தது இத்திருத்தலம் (2). புதிது புதிதாக மலரும் பூக்களையுடைய சோலைகளில் பன்னிறத் தும்பிகள் திரிந்து கொண்டுள்ளன; வயல்கள் எப்போதும் கருவடைந்த பயிர்களால் நிறைந்திருப்பதால் அவை இரவு போல் இருண்ட காட்சியைத் தருகின்றன (3), சிறந்த சிறகுகளையுடைய மயில்களும் குயில்களும் சோலைகளில் தெருங்கி வாழ்கின்றன; நறுமணம் மிக்க மலர்கள் எங்கும் சிந்தப்பெற்றுள்ளன; வண்டுகள் முரன்று இசை ஒலிகளை எழுப்புகின்றன; பரந்து வளர்ந்துள்ள மலர்கள் மணம் வீசி நிற்கின்றன (4), இங்குள்ள சோலைகளில் குயில்கள் மாக்கிளைகளினின்றும் குதித்துக் கூவும்; அவ் வொலிகளைக் கேட்டு மயில்கள் நடனமாடும் (5). அன்றி யும் வாத்தியங்களின் மெல்லோசையை மே க. முழக்கமாகக் கருதியும் பாடல்களால் துதி செய்வதையும் அந்த இசைக்குத் தக்கவாறு தாங்களே நர்த்தனங்களும் ஆடக் கண்ட தேவர்கள் இப்பூவுலகில் இத் திருப்பதியைப் போன்ற நகரம் எங்கும் இல்லை என்று கொண்டாடி மலர்கள் துரவுகின்றனர் (7), நல்ல நீர் வாய்ப்பு அமைந்த இத்திருத்தலத்தில் நீர்ப் பெருக்கில் பல பல மணிகள் கொழிக்கப் பெற்று வரும்; அம்மலர்களின் ஒளி எங்கும் பரவி இத்திருத்தலம் இரவிலும் பகல்போல் காட்சி தரும் (8).