பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱意憩 பரகாலன் பைந்தமிழ்

எம்பெருமான் : இங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமகனைப்பற்றி ஆழ்வார் கூறுவது : நிலம் நீர் எரிகால் விசும்பு என்று வழங்கப் பெறும் ஐம்பெரும் பூதங் களுக்கும் அந்தராத்மாவாக இருப்பவன்; சேதநர்களின் எல்லா எண்ணங்கட்கும் ஊக்கம் தருபவன்; கண்ணனாகத் திருவவதரித்த காலத்து தயிர், பால், நெய் முதலிய வற்றைக் களவு செய்து உண்டவன்; அக்குற்றத்திற்காக யசோதைப் பிராட்டியால் கட்டுண்டவன்; குடக் கூத்தாடிய பெருமான் (1). பாலனாய் உலகேழும் தனது திருமேனி அளவில் ஒடுங்கும்படி வியத்தகு முறையில் திருவமுது செய்தவன் (2). இவ்வாறு உண்ட உலகங்களை படைப்புக் காலத்தில் வெளிப்படுத்தியவன் (3). அசுரர் களைக் கொன்று குவிந்து வெற்றி கொண்ட பெருமான் (4). சுதர்சனம் (திருவாழி) கெளமோதகி (கதை), பாஞ்ச சன்னியம் (திருச்சங்கு), நாந்தகம் (வாள்), சார்ங் கம் (வில்), ஆகிய ஐந்து ஆயுதங்கள்ைத் திருக்கையில் ஏந்தியவன் (5). தம்பியுடனும் துணைவியுடனும் வெம்பி எரி கானகத்தில்,உலாவித் திரிந்த காகுத்தன் (6). புத்திர னில்லையே என்று கவன்ற நந்தரின் சோகம் தீரும்படி மதுரையினின்றும் ஒருவருக்கும் தெரியாமல் ஆய்ப்பாடிக்கு வந்து சேர்ந்த பெருமிடுக்கன் (7). தியானத்திற்குத் தகுந்த மூர்த்தியாக நந்திபுர விண்ணகரத்தில் திருக்கோயில் கொண்ட நாதன் (8). இந்த எம்பெருமானின் திருவா ணையைச் சிரசாக வகிக்கும் கடியார்கள் ஊழிப் பெரு வெள்ளத்திலும் தம் உடல்கள் அழியப் பெறார் (9). இங்ங்ணம் எம்பெருமானுடைய பெருமையைப் பேசிய ஆழ்வார் தம் மனத்தை நோக்கி 'நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே" என்று ஒருதடவைக்கு ஒன்பது தடவை யாகப் பன்னியுரைக்கின்றார்.