பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 291.

வயல்களிலும் மலர்ந்து காணப்பெறுகின்ற, அழகிய அன்னப் பறவைகள் பேடையுடன் கூடித் தாமரை மலர் களின் மீது காட்சி அளிக்கின்றன (9). இதற்கு ஒர் உட் கருத்து உரைப்பர் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணா சமி. இரு பக்கத்திலும் கரும்பும் செந்நெலும் அசைவது சாமரம் வீசுவதொக்கும்; தாமரை மலரின்மீது அன்னமும் பேடையும் கூடி வாழ்வது பெருமானும் பிராட்டியும் கூடி வாழ்வதொக்கும்."

ஊர் சூழ்நிலை: இந்த ஊரின் மாடமாளிகைத் தூண்களில் அழுத்தப்பெற்றுள்ள நவமணிகளின் ஒளி இடைவிடாது திகழ்வதால், இது பகல், இது இரவு' என்று சிலர் ஐயுறுவர். இது பொய்யுரை என்று சிலர் ஐயுறுவர். எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இத் தலம் அதிசயம் வாய்ந்ததாக அமையவேண்டும் என்னும் ஆசையால் ஆழ்வார் இங்கனம் அருளிச் செய்கின்றார். என்று கொள்ளவேண்டும் (8). அன்பின் மிகுதியால் இங் வனம் ஊறல் தகும். இத் திருத்தலத்து வாழும் அழகிய மகளிர் செய்யும் நடனப் பயிற்சினால் எழும் இன்னோசை நாற்றிசைகளிலும் உம்பர் உலகங்களிலும் பரவி அதிர் கின்றது (3). ஆழ்வாரின் ஆதராசியத்தால் விளைந்த கற்பனை இது.

எம்பெருமான்: பரத்துவநிலை, வியூக நிலை, விபவ: நிலைகளிலுள்ள எம்பெருமானே அர்ச்சைநிலையில் திரு. வெள்ளியங்குடியில் எழுந்தருளியுள்ளான் என்பது ஆழ் வாரின் திருவுள்ளம். இந்தமூன்று நிலை எம்பெருமான் கள் பாசுரங்களில் கலந்தே காணப்பெறுகின்றனர். பாசுரங்களில் ஆழங்கால்படும் நிலையில் இந்த எம்பெரு மான்களையும் சிந்தித்து அநுபவிக்கின்றோம். இந்த எம்பெருமான் ஆய்ச்சியர் முறையிடும்படியாக வெண்

6. பெரி. திரு. 4.10:9 திவ்வியயார்த்த திபிகை

é芬ffGā了ó。