பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேஈழதஈட்டுத் திருத்தலப் பயணம் 2தி

'அமரர்-தேவர்; இடர்-துன்பம்; அரி-சிங்கம்:

அசுரர்தம் பெருமான்-இரணியன்)

என்று இத்திருக்கோயிலைப் பற்றிப் பேசுவர் ஆழ்வார். தேவர்கட்குத் துன்பம் இழைத்த இரணியனை நரசிங்க மாக வந்து தம் மடியில் வைத்து ஆவன்மார்பைக் கிழித்து உயிர்குடித்த பெருமான். பல சுருதிப் பாசுரத்தில் (16) வராக அவதாரம் எடுத்துப் பூமிப் பிராட்டியாரைத் தம் கோட்டிடை வைத்தருளியவனும் தெளித்த அலைகள் தம் திருவடியின்மீது மோதும்

ம் படியாகத் திருப்பாற் கடலில் கண் வளர்ந்தருன்பவனான எம்பெருமானே திருவெள்ளி யங் குடியில் எழுந்தருளியிருப்பவன் என்கின்றார். மேற் குறிப்பிட்ட எம்பெருமான்களே அர்ச்சை வடிவத்தில் திரு வெள்ளியுங்குடியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி புள்ளனர் என்பது ஆழ்வார் உணர்த்தும் கருத்து. எந்த நிலையில் எழுந்தருளியிருந்தாலும் அவனே பரம பதநாதன் என்ற வைணவ சமயக்கருத்தினை உணர்த்தும் நிலையில் பாசுரங்கள் அமைந்துள்ளன.

29. புள்ளம் பூதங்குடி? :வெள்ளியங்குடியிலிருந்து புள்ளம் பூதங்குடிக்கு வருகின்றார் மங்கை மன்னன். இராமபிரான் சடாயுவைத் தகனம் செய்து அப்புள்ள 7. புள்ளம் பூதங்குடி : மயிலாடுதுறை-திருச்சி இருப் பூர்தி வழியில் சுவாமி மலை என்னும் நில்ைய்த் திலிருந்து 4 கி. மீ. தொலைவு. மாட்டுவண்டிகள் கிடைக்கும். கும்பகோணத்திலிருந்து சுவாமி மலைக்குப் போகும் பேருந்து வழியிலிருப்பதால் கும்பகோணத்திலிருந்து போவதே சிறப்பு. எம் பெருமான்: வல்வில்லிஇராமன். தாயார் : பொற்றாமரையாள். மூலவராகிய இராமன், கையில் திருவாழி, திருச்சங்குகளுடன் காட்சி தருவது எங்கும் காணாத காட்சியாகும். நிலை: கிழக்கு நோக்கிய திருமுக மண்டல்ம்; புயங்க சயனம். பெரி. திரு 5.1 (பதிகம்)