பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器登链 பரகாலன் பைந்தமிழ்

ரசனை பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம்'s புகச் செய்த தலமாதல்பற்றிப் புள்ளம் பூதங்குடி என்ற திருநாமம் பெற்றது’.

தலச் சூழ்நிலை : மருதநிலச் சூழ்நிலை. சோலை களில் நறுமணம் மிக்க மலர்கள்மீது சுரும்பு என்ற வண்டினங்கள் இருந்து கொண்டு இன்னிசை எழுப்பு கின்றன்; அழகுமிக்க மயில்கள் கூத்தாடுகின்றன; பொறி சிறை கொண்ட வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன (1). தாழ்ந்திருக்கும் கழனிகளில் மீன்கள் துள்ளி விளையாடு கின்றன; பறவைகள் இக்கழனிகட்குச் சென்று தம் குட்டிகட்கு உணவாகக்கூடிய சிறு மீன்களைத் தேடுகின் றன (21. திருத்தலத்தைச் சுற்றிலுமுள்ள தோட்டங்களில் தென்னை மரங்கள் நிறைந்துள்ளன. அவற்றினின்றும் தேங்காய் நெற்றுகள் இற்று விழுங்கால் மீன்கள் துள்ளி அப்பால் ஓடுகின்றன; நாரைகளும் இதனால் சிதறி ஒடுகின்றன; கழனிகளிலும் தாமரை முதலிய பூக்கள் நிறைந்து காணப் பெறுகின்றன. (3). சிவந்த கால்களை யுடைய நாரைகள் கழனிகளில் நிறைந்து கிடக்கும் ஆரல் மீன்களைத் தமக்கு இரையாகக் கொள்வதற்கு வந்து சேர் கின்றன (5). ஒரு நாளும் வற்றாத நீர் நிலைகளில் உள்ள. தாமரைப் பூக்களில் வண்டுகள் இருந்து இசைபாடு கின்றன; புன்னை மரங்கள் பொன்னிறமான மகரந்தங் களை உதிர்த்து நிற்கின்றன (6) நாற்புறமும் உள்ள

8. கம்ப. ஆரணி. சடாயு உயர்நீத்த 216 9. தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகிய 'திருப்புட்குழி திருநாமம் பெற்றது நினைவு கூர்ததககது. ! {}. ந்தப் பாசுரத்தில் ம்வார் வாக்கைப் ### పీ.' திருப் புன்னை மரம் வளர்க்கப் பெற்று வருதல் அறிய்த் தககது.