பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பரகாலன் பைந்தமிழ்

களில் தாழம் பூக்கள் மலர்ந்திருக்கும்; அவற்றைக் கண்ட கெண்டை மீன்கள் குருகுகள் தம்மை இரை கொள்ளுவதற் காக வந்து அசையாமல் நிற்கின்றன போலும் என்றெண்ணி அஞ்சி ஒளிந்து கொள்ளும் (9).

ஆழ்வாரின் இறையநுபவம் : இந்த எம்பெரு மானை ஆழ்வார்.

தாம்தம் பெருமை அறியார், தூது வேந்தர்க்கு ஆய வேந்தர்'

என்கின்றார். எம்பெருமான் எல்லாம் அறிந்தவன் என்றும், எல்லா வல்லமையும் பெற்றவன் என்றும் வேத வேதாங்கங்களில் துவலப் பெறாததால் அவன் தன் பெருமையைத் தான் அறிய வல்லவனல்லன்; உனக்கு இவ்வளவு பெருமை உண்டு என்று பிறர் சொல்லக் கேட்பவனேயன்றிதன் பெருமையைத்தான் அறியாதவன். எம்பெருமானுக்குப் பெருமை பரத்துவம் பொலிய நிற்கும் இருப்பன்று. ஏவிய செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தன்னைத் தாழவிட்டுக் கொண்டிருக்கும் இருப்பே இங்குப் பெருமை எனப்படுகின்றது. பாண்டவர்கட் காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது சென்று பாண்ட வர் தூதன்' எனப் பெயர் பெற்றான். இவனுடைய செளலப்பிய குணம் அறிவிற் சிறந்தோரால் ஈடுபடும் படியாகவே இருக்கும். அரசர்க்கரசன் என்ற பெருமை யும் மிக்குத் தோன்றும்.

இந்த எம்பெருமான் நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்காகக் கொழுத்த ஏழு காளைகளை

மின்னல் முதலில் தெரியும்; ஒலியின் வேகம் குறைவாதலால் இடிமுழக்கம் பின்னர்க் கேட்கும். 13. பெரி. திரு. 5. 2. 1