பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 303.

என்செய் கேன் அடி யேன்உரை யீர்.இதற்கு

என்று என்மனத் தேயிருக் கும்புகழ் தஞ்சை ஆளியைப் பொன்பெய ரோன்நெஞ்சம்

அன்றி டந்தவ னைத்த ழலேபுரை மின்செய் வாளரக் கன் நகர் பாழ்படச்

சூழ்க டல்சிறை வைத்திமை யோர்தொழும் பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை

அன்றி என்மனம் போற்றிஎன் னாதே"

(என்றும்-எக்காலமும்; புகழ்-கீர்த்தியையுடைய

வன்; ஆளியை-ஆள்பவனை; பொன்பெய. ரோன்-இரணியன்; இடத்தல்-பிளத்தல்; தழல்நெருப்பு; மின்செய்-ஒளிவிடும்; சிறைவைத்துஅணைகட்டி: மால்வரை - பெரிய 42இல் போன்றவன்)

திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும்போது இடையிலே தஞ்சையாளி யையும் நினைக்கின்றார் ஆழ்வார். 'எப்போதும் என் இதயத்தை. விட்டுப் பிரியாமல் வந்த புகழையுடையவனாய், தஞ்சை மாமணிக் கோயிலிலே எழுந்தருளியிருப்பவனாய், பிரக. லாதன் பொருட்டு இரணியனின் மார்பை பிளந்தெளிந்த வனாய், இராவணனின் இருப்பிடமான இலங்கையைச் சுடுகாடாவதற்குக் கடலிலே அணைகட்டி எழுந்தருளின வனாய், இப்படிப்பட்ட வியத்தகு செயல்கட்குத் தோற்றுத் தேவர்களால் வணங்கப் பெறுபவனாய், அப்படி வண்ங்கப் பெறுவதில் ஒளிபெற்ற வடிவையுடைய வனான எம்பெருமானையன்றி மற்றொருவரை என் மனம் வாழ்த்த விரும்பாது' என்கின்றார்

2. பெரி. திரு. 7, 3: 9.