பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #4 பரகாலன் பைந்தமிழ்

—a

தன் சிந்தனைக்குப் பொருளாக இருப்பவன்; உபாய மாக இருப்பவன்; திருமகள் கேள்வன், வேங்கடத்து அப்பன்; தன் நெஞ்சில் ஒரு நொடிப் பொழுதும் நீங்கா திருப்பவன்: திருக்கோவலூரில் திரிவிக்கிரமனாகச் சேவை சாதிப்பவன், (7). பெளத்தர்கள், சமணர்கட்கு அருள் செய்யாதவன்; வைதிகர்கட்குத் திருவருள் சுரப்பவன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்கட்கும் தனது தந்தை, தாய்க்கும் நித்திய சூரிகட்கும் சுவாமியாக இருப்பவன் (8). நிலையில்லாதவற்றை நெஞ்சிற் கொள்ளாமலும் இந்திரி யங்கனைப் பொருள்கள்மீது செல்லாமலும் தடுத்துத் தன்னையே உண்மையாகச் சிந்திப்பவர்கட்குத் தன் சொரூபத்தைக் காட்டிக் கொடுப்பவன்; அஞ்சனம், காளமேகம் மரகதப்பச்சை இந்நிறங்களையுடையவன் (9). இத்தகைய எம்பெருமானைத் தென்னரங்கத்தில் கண்டதாகக் கூறுவார் .

பிறிதொரு பதிகத்தில் (5.7) திருவரங்கத்தில் எழுந் தருளியிருப்பவன் இன்னான், இன்னான்’ என்று மீண்டும் விளக்குவார். நான்கு மறைகள், வேள்விகள், வியா கரணம் சொற்களால் அறியப்படும் பொருளும் காரண நிலையிலிருந்து காரிய நிலைக்கு வந்த நெருப்பு, நீர், பூமி, மேகம், வரவு, ஏழுகடல்கள், ஏழு குலபர்வதங்கள், ஆகாயம் இவற்றோடு கூடிய பிரம்மாண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் (1). இந்திரன், பிரமன், உருத்திரன் ஆகிய தேவர்கள் பல திருக்குணங்களைச் சொல்லித் துதிக்கப் பெற்றவனும் உயிர் வர்க்கத்திற்கெல்லாம் தந்தையாய், தாயாய், பிள்ளைகளாய், சுற்றங்களாய், அளவறிந்த பந்துவர்க்கங்களாய், சம்சார பந்தத்தை அறுக்க வல்ல மருந்தாய், சம்சார பந்தம் அற்றபின் விளையக்கூடிய நிர்மல சுபாவமாய், படைப்பு, காப்பு, அழிப்பு இவற்றிற்குக் காரணமாயிருக்கும் எம்பெருமான் (2). நிலையான பெரிய பூமி, மலைகள் கடல்கள் ஆகாயம், அசுரர்கள் இருப்பிடம் ஆகிய இவையெல்லாம் பேரிருள்