பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.15 பரகாலன் பைந்தமிழ்

வடிகளில் சரணம் புகுகின்றார், இராமவதாரத்தில் குகப் பெருமானிடத்தில் ஆர்ட்டியருளின திருவருள் தன் திறத் இல் காட்டுமாறு இறைஞ்சுகின்றார் (1). வாயு தேவனின் குமாரனான அநுமனின் இழிகுணங்களைப் பாராட்டா மல் உடனிருந்துஉண்ட பெருங்கேண்மையை நினைந்து தன் திறத்திலும் அத்தகைய அன்பைக் காட்டுமாறு வேண்டுகின்றார்(2) கசேந்திரனுக்கு அருளினபெருமையை தினைந்து திருவடியை அடைந்ததாகச் செப்புகின்றார் (3). கருடனிடமிருந்து நாககுமாரனான சுமுகனைப் பாது காத்ததுபோல் தன்னையும் யமனது வசமாகாமல் பாது காக்குமாறு வேண்டுகின்றார் (4). கோவிந்தசாமி என்னும் என்னும் அந்தணனுக்கு அவன் கருத்தறிந்து காரியம் செய்ததுபோல் தன் கருத்தறிந்து செயற்படுமாறு இறைஞ்சுகின்றார் (5). மிருகண்டுவின் குமாரனான மார்க் கனுக்கு யம பயத்தை நீக்கி தன் திருவடியில் வைத்துக் கொண்டிருப்பதுபோல் தன்னையும் அப்படிப்பட்ட கிரு பையால் ஆதரிக்க வேண்டுமாறு இறைஞ்சுகின்றார் (6), பல ஆண்டுகட்குமுன் மரித்த சாந்தீபினி குமாரனை மீட்டுக் கொடுத்தது போன்ற கருணையைத் தன் திறத்தி லும் காட்டுமாறு வேண்டுகின்றார்(7) மாயமாய் மறைந்த வைதிக அந்தணனது நான்கு குமாரர்களையும் தேடிக்கொ டுத்து உதவினது போன்ற கிருபையைத் தன் திறத்திலும் காட்டுமாறு இறைஞ்சுகின்றார் (8). தொண்டைமானுக்கு தனது திருவாழி திருச்சங்குகளை உதவிப் பகையை முடித் தருளியது போன்றும் பின்னர் அவனுக்கு மந்திரோபதேசம் செய்து ஆட்கொண்டது போலவும் தனக்கும் உதவுமாறு வேண்டுகின்றார் (9). இவற்றையெல்லாம் செய்தருளின் திருவரங்கனது அருஞ்செயல்களை நினைவுகூர்ந்து தன்னையும் அவர்களைப்போல் பாதுகாத்தருளுமாறு வேண்டி அவன் இணைத் தாமரை அடிகளில் சரண் புகு கின்றார்.