பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 335,

fகட்டுஏறு-காவல் மிக்ககுள்ள அமர்ந்த-எழுந்

தருள்கின்றi என்று திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும்போது இந்த எம்பெருமானும் ஆழ்வார் சிந்தை யில் எழுகின்றார். காயகி பாவனையில் எம்பெருமானை அதுபவிக்கும் திறம் பிறிதோரிடத்தில் காட்டப்படு கின்றது."

6. திருப்புல்லாணி: திருமெய்யத்திலிருந்து திருப் புல்லாணிக்கு வருகின்றார். இந்த ஆழ்வார் மட்டிலும் மங்களாசாசனம் செய்த தலம் இது.

தலச் சூழ்நிலை: அற்புதமான நெய்தல் நிலக் காட்சிகள் பாசுரங்களின்மூலம் அறிய முடிகின்றது. இராமேசுவரத்தில் கடல் அமைதியாக இருப்பதுபோல் திருப்புல்லாணியில் கடல் அமைதியாக இல்லை; அங்கு மிகவும் கொந்தளிப்புடன் உள்ளது. அச்சத்தை விளை விக்கக் கூடிய பேரலைகள் காணப்படுகின்றன. திருமங்கை யாழ்வாரும்,

பொருது முன்னிர்க் கரைக்கே

மணியுந்து புல்லாணி (9. 3: 2

6. இந்நூல் பின் இயல் ஒன்றில் காண்க.

7. திருப்புல்லாணி: இராமநாதபுரத்திலிருந்து கீழக் கரைக்குச் செல்லும் பேருந்து வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். கடற்கரையை ஒட்டியதலம். இறைவன்; தெய்வச் சிலையார், கல்யாணிசகங்காதர்; வீற்றிருக்கும் திருக்கோலம்; கிழக்குநோக்கிய திருமுக மண் டலம். தாயார்: கல்யாணவல்லி நாச்சியார் பெரி. திரு. 9.3; 9.4 (பதிகங்கள்) பெரி. திருமடல் (6 7), மேலும் விவர்ம்வேண்டுவோர் பா. நா. தி. (கட்டுரை-3) காண்க.