பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总器翰 பரகாலன் பைந்தமிழ்

7. திருத்தண்கால்': புல்லாணியை அநுபவித்த ஆழ்வார் திருத்தண்காலுக்கு வருகின்றார். தலத்தின் மீது நேரான பாசுரங்கள் இல்லை. தென்னரங்கத்தின் மீதுள்ள பாசுரம் ஒன்றில்,

பேரானை குறுங்குடிஎம்

பெருமானை திருத்தண்கால்

ஊரானை கரம்பனூர்

உத்தமனை (5, 6: 2)

என்று இவ்வூரையும் குறிப்பிடுகின்றார். திருநெடுத் தாண்டகத்திலுள்ள,

பொங்கார்மேல் இளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் நீர் அரும்பப் போந்து நின்று செங்கால மடற்புறவம் பெடைக்குப் பேசும்

சிறுகுரலுக் குடல்உருகிச் சிந்தித்து ஆங்கே தண்காலும் தன் குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்பாடி ஆடக் கேட்டு "தங்காய்! நங் குடிக்கிதுவோ நன்மை' என்ன நறையூரும் பாடுவாள நவில்கின்றாளே.

-திருநெடுந் 17 (பொங்கு ஆர் - வளர்ச்சி மிக்க; பொன்-தேமல்; பொரு-போரிடும்; செங்கால-சிவந்த கால்களை யுடைய புறவம்-புறாக்கள்)

9. திருத்தண்கால் : சீவில்லிபுத்துார் - விருதுநகர், நெடுஞ்சாலையிலுள்ள தலம். இறைவன் : தண் காலூர் அப்பன்: நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மணடலம். தாயார்: அன்ன காயகி, அனந்த நாயகி, அமுத நாயகி, ஜாம்பவதி என்ற நால்வர். பெரி. திரு. 5, 6: 2; திருநெடுந். 17; சிறி. திரும்டல் (39); பெரி. திருமடல் (59) மேலும் விவரம் வேண்டுவோர் பா. நா. தி (கட்டுரை - 8) காண்க.