பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 33.3

கொல்லை முல்லை மெல்லரும்

பீனும் குற்றாலம் '

என்ற சம்பந்தப் பெருமானின் திருவாக்கினை நினைக்கச் செய்கின்றது. இருவரும் ஒரு காலத்தவர் என்பதையும் சிந்திக்கின்றோம்.

இறையதுபவம் : திருப்புல்லாணியில் ஆழ்வாருக்கு ஏற்பட்ட நாயகி நிலை இங்கும் தொடர்கின்றது. திரும் புல்லாணியிலிருந்து ஆழ்வாரின் நெஞ்சு குறுங்குடிக்குச் சென்றதேயன்றி உடல் அங்குச் செல்ல முடியவில்லை. ஆற்றாமையாலே, பாதகப் பொருள்களில் ஈடுபட்டுக் கண்ணுறங்காமல் துடிக்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது. "வெண்ணிறமுள்ள இளம்பிறை, பூக்களில் படிந்து வீசும் தென்றற்காற்று, ஒன்றி வாழும் அன்றிலின் இணைகள் {9. 5: 1); மல்லிகையில் அணைந்து வந்த மந்த மாருதம் (2); காலைப் பொழுதுபோல் வருத்துதல், இரவின் நாழிகை நீண்டது போன்ற தோற்றம், எரிகின்ற நெருப்பு போன்று தகிக்கும் வமை (3); மாலையில் வீடு திரும்பும் காளைகளின் கழுத்தில் தொங்கும் மணியின் ஒலி (4): ஆயன் தீங்குழல் ஓசை, தென்றலுடன் கூடிய மாலை, அந்திப் பொழுதில் தோன்றும் இளம் பிறை (5), கட லோசை, கோபாலனின் குழல் ஒசை (8) ஆகியவற்றால் படும் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் தன் தாயாரையும் தோழிமாரையும் நோக்கிக் குறுங்குடிக்கே என்னை உயத்திடுமின்’ என்று வேண்டுகின்றார். இது கண்ணனை அடையவேண்டும் என்ற ஆர்த்தியைப் பொறுக்க மாட்டாத ஆண்டாள் தன்னைக் கண்ணன் எழுந்தருளியிருக்கும் இடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கு மாறு வேண்டுவதை' நினைக்கச் செய்கின்றது.

12. தேவாரம் 1. 99; 3 13. நாச். திரு. 12