பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。费等意 பரகாலன பைந்தமிழ்

என்ற வள்ளுவர் வாக்கும் இதனை நிலைநாட்டும். "காதலரோடு நாம் இன்புற்றமுன்னாள்களில் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடிய வாய்ச் செல்கின் கங்குல்கள்’ என்ற பரிமேலழகரின் உரையும் இதனை அரண் செய்யும்.

ஒண்சுடர் துயின்றதால் என்னும் : நோயினால் துன்புறுவோருக்கும் காதல் நோயால் நவிவோருக்கும் பகற்பொழுது ஒருவாறு ஆற்றக் கூடியதாக இருக்கும்; இரவுப் பொழுதோ சிறிதும் பொறுக்க வொண்ணா தாய்க் கழிவது வழக்கம். ஆகவே, இவர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இராப்பொழுதைப் போக்குவோம்’ என்று எழு ஞாயிற்றை எதிர் பார்த்துக்கொண்டே இருப் பார்கள்; உண்மையில் இரவு முப்பது நாழிகையாயிருந் தாலும் காதல்நோய் மிக்கிருக்கும் காலத்தில் முப்பது யுகம்போல் நெடுகிச் செல்லுமாதலால், 'பாழும் பகலவன் செத்துதான் போய் விட்டானோ? உயிருடன் இருந்தானே யாகில் இப்படி இராக் காலமாய்ச் செல்லுமோ? என்று இரவு நீடித்தலை நினைத்துக் கதறுவார்கள்: பராங்குச நாயகியும் (நம்மாழ்வார்),

பெண்பிறந்தார் எய்தும்

பெருந்துயர் காண்கிலேன் என்று ஒண்சுடரோன் வாராது

ஒளித்தான் (திருவாய். 5,4:4)

என்றாள். இவளோ சூரியன் செத்தே போனான்’ என்கின்றாள்.

தோழி, ஆழியும் புலம்பும், அன்றிலும் உறங்கா, தென் றலும் தீயினிற் கொடிதாம்; ஒ: மகள் தோழியை நோக்கிச் சொல்லுகின்ற சொற்களைத் தாயார் அப்படியே சொல்லுகின்றாள். மகள் சொல்லுவதாவது :