பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பரகாலன் பைந்தமிழ்

என்பது முதற்பாசுரம். 'என் கணவன், செய்த அருமைக் செயல்கள் உங்களுக்குத் தெரியுமா? கம்சன் தன் மத யானையைக் (குவலயா பீடம்) தன் கணவனைக் கொல் மாறு அரண்மனையில் நிறுத்தி வைத்தான்; இவனோ சேற்றிலிருந்து முள்ளங்கிக் கிழங்கை இழுப்பவன் போல அத்தத் தந்தங்களை எளிதிற் பறித்திட்டு அந்த யானை யின் உயிர் தொலைத்திட்டான்; அப்படிப்பட்ட சூரன் காண்மின் என்கணவன்" என்கின்றாள். இவ்வளவை யும் செய்தவள் பார்த்தன் பள்ளித் திருப்பதியின் திரு நாமத்தையிட்டு இசைபாடத் தொடங்கி விட்டாள்" என்கின்றாள்.

A, வெருவாதாள் வாய்வெருவி (5.5): இது திரு வரங்கம் என்ற திவ்விய தேசத்தின் மீதான திருமொழி; தாயின் வாக்காக அமைந்தது. திரு அரங்கநாதன் திறத் தில் ஆழ்வாருக்கு உண்டான பிராவண்யத்தைத் திருத் தாயார் எடுத்துரைப்பதாக நடைபெறுகின்றது இத் திருமொழி.

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே!

வேங்கடமே! என்கின் றாளால் மருவாளால் என்குடங்கால் வாள் நெடுங்கண்

துயில்மறந்தாள் வண்டார் கொண்டல் உருவாளன் வானவர்தம் உயிராளன்

ஒலிதிரைநீர்ப் பெளவம் கொண்ட திருவாளன் என்மகளைச் செய்தனகள்

எங்ங்னம் உரைக்கின் றேனே (1)

(வெருவாதாள்-அஞ்சாதவள்; வெருவி-பிதற்றி: குடங்கால்-மடி மருவாள்-பொருந்துகின்றிலள்; உருவாளன்-திருவுருவமுடையவன்; வானவர்நித்தியசூரிகள்; ஒலி-சத்தமிடுகின்ற; பெளவம். கடல்:திரு-இலக்குமி;செய்தனகள்-செய்தவற்றை; சிந்திக்கேன்-நினைக்கத்தான் முடியுமோ)