பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*。

7

5

தாய்ப் பாசுரங்கள் £;

செய்தி: வண்ணம்-மேனி நிறம்; பொன் திறம். பசலை நிறம்} என்பது இத்திருமொழியின் ஜக்தாவது பாசுரம்.

பெண்மை என்?: செனரிராஜப் பெருமாள் எழுத் தருளியிருக்குமிடம் திருக்கண்ணபுரம். அவ்விடத்தை நோக்கி அஞ்சலி செய்கின்ற இப்பெண் மணி அந்த உடல் செயலோடு நில்லாமல் தன் நெஞ்சில் ஒடுகின்ற எண்ணக் களைச் சிறிதும் ஒளிக்காமல் உள்ளது உள்ளபடியே என் னிடம் வாய்விட்டுச் சொல்லுகின்றாள்; ஒன்றையும் மறைக்காமல் வெட்ட வெளிச்சமாக வெளியிடுவதற்குரிய, உயிர்த்தோழியிடத்தும் ஒளித்தே தீர வேண்டும் படியான, இரகசியச் சொற்களையும் என்னிடத்தில் கூசாமால் வாய் விட்டுச் சொல்லுகின்றாளே இவள்; இஃது என்ன பெண்மை? -பெண்மை குணத்திற்கு இது தகுதியோ?” என்கின்றாள் திருத்தாயார்.

தன்னுடை உண்மை உரைக்கின்றாள் : 'வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வதுயாம் என்று பேசினாள் என்று அடுத்து வரும் பாசுரத்தில் சொல்லுதலாலே அதுவே இதற்குப் பொருள் என்றும் கொள்ளலாம். திருவேங்கடமலையிலிருந்து திருக்கண்ண புரத்தில் நித்திய வாசம் பண்ண வந்திருக்கின்றவன் என்ப தாகக் தன்னுடைய உண்மையை உரைக்கின்றாள் என்க.

வெண்ணெயுண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினாள் ; இப் பெண்மகள் பிரிவாற்றாமையால் உடம்பு வெளுத்து வருந்திக்கிடக்கின்ற நிலை கண்டு எம்பெருமானிடத்தில் இவளுக்குண்டான காதலை மாற்றுவதற்காக அவனு டைய தீம்புகளையும் அவன் பட்ட அவமானங்களையும் எடுத்துரைத்தால் அவனிடத்தில் இவளுக்கு வெறுப்பு உண்டாகிவிடும்’ என்றெண்ணிய சிலர், 'கண்ணனாம் கண்ணன், என்ன கண்ணன்! வெண்ணெய் திருடுவதும்,