பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 荔姆

இத்திருமொழி. அருளார் திருச்சக்கரத்தால் (திருவிருத். 33) என்ற திருவிருத்தப் பாசுரம் இத்திருமொழியுடன் ஒரு புடை ஒப்பாக இருப்பதை நோக்கி மகிழத்தக்கது.

செருவழி யாத மன்னர்கள் மாள

தேர்வலங் கொண்டு.அவர் செல்லும் அருவழி வானம் அதர்படக் கண்ட

ஆண்மைகொலோ? அறியேன் நான் திருமொழி எங்கள் தேமலர்க் கோதை

சீர்மையை தினைந்திலை, அந்தோ! பெருவழி நாவற் கனியும் எளியள்

இவளெனப் பேசுகின் றாயே (5) :செரு - போர்க்களம்; மாள - இறக்க; வானம் - வீரசொர்க்கம்; அதர்பட - பெருவழியாக்கின; ஆண்மை - ஆண்பிள்ளைத் தனம். திருமொழி - மதுரமான பேச்சு, கோதை - மயிர்முடி, சீர்மை - சிறப்புi. என்பது இத்திருமொழியின் ஐந்தாவது பாசுரம். 'பிரானே, பேச்சின் இனிமையாலே உனது நெஞ்சினை பும் கவரவல்லாய். தலைவியின் பூவணிந்திருக்கும் அழகாலே உன்னைப் பிச்சேற்ற வல்லவளான பரகால நாயகியின் சிறப்பைச் சிறிதும் நினைக்கின்றிலையே. இவளிடத்தில் மிகவும் அலட்சியம் பாராட்டுகின்ற னையே! இதற்கு என்ன காரணம்? பார்த்தன் சிலை வளையத் திண்டேர் மேல் முன்னின்று, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியச் செய்த மிடுக்கை நினைத்தோ இவளை இங்ஙனம் அலட்சியம் செய்கின்றாய்?' என்கின்றாள் திருத்தாயார்.

செருவழியாத மன்னர்கள்: பாரதப் போருக்கு முன்பு ஒரு காலும் ஒரிடத்திலும் தோல்விபெற்றறியாத