பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

بہیہ ہسسہ۔بیسمم ہے۔--

அதிரத மகாரதர்களான வீடுமன், துரோணர் முதலிய வர்கள்.

தேர் வலங்கொண்டு: தான் ஆயுதம் எடுப்பதில்லை என்று சூளுரைத்து வைத்திருப்பதனால் தேர்க்காலால் எதிரிகளை உழக்கினான்.

அவர் செல்லும் அறுவழி வானம்: போர்க் களத்தில் மாண்டொழித்தவர்கள் வீரசொர்க்கம் புகுவதாகச் சாத் திரங்களின் கொள்கை. இதனால் இறந்த வீரர்கள் செல் லும் வழி அருவழி வானம்’ எனப்பட்டது. பாரதப் பெரும் போருக்குமுன்பு நெடுநாளாகவே வீரசொர்க்கத் திற்குப் போவாரின்மையால் புல்லெழுந்து கிடந்த அவ் வழியைப் பெருவழியாகச் செய்தனன் கண்ணன். அப் படிப்பட்ட "ஆண்பிள்ளைத் தனத்தை நினைந்தோ இவளைப் பொருட்படுத்தாதொழிகின்றாய்?' என்கின் நாள் திருத்தாயார்.

பெருவழி காவற் கனியிலும் எளியள் இவள்: 'பெரிய தொரு வழியில் நாவற்பழம் விழுந்து கிடந்தால் அதனைக் குனிந்து எடுக்கலாம்; அல்லது எடுக்காமல் தவிர்க்கலாம் அன்றோ? அதுவே எட்டாத இடத்தில் இருக்குமாயின் அதன்மீது விருப்பம் மிஞ்சியிருக்கும். சர்வ சாதாரணமான பல்லோர் செல்லும் விழியிலே விழுந்து கிடந்ததாகில் அஃது ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை. அது போலவே இவளையும் கருதுகின்றாய் போலும்' என்கின்றாள் திருத் தாயார்.

9. பொங்கார் மெல்லிளங் கொங்கை (திருநெடுந். 47) முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகத் தில் (11-20) பாசுரங்கள் திருத்தாயார் கூற்றாக நடை பெறுகின்றது. இவற்றின் ஆழ்வாருக்கு நாயகி நிலை ஒரு புறத்திலும், தாய் நிலை மற்றொரு நிலத்திலும் நடக்