பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 53.就

தானும் களித்துப் பரிமாறின. படிகளை நினைத்துக் கொண்டாள்; பின்னையும் உடலுருகினாள். செங்கால மடப்புறவம்: ஆண் புறாவின் சிவந்த கால்கள் தாயகனு: டைய செந்தாமரை அடிகளை நினைப்பூட்டி வருத்தின் போலும். இது கண்ணுக்கு இலக்கானபடி. மெடைக்குப் பேசும் சிறு குரல்: இது காதுக்கு இலக்கானபடி இங் வனம் அவன் நம் தாதிலே பேசும் பேச்சுகள் கேட்கப் பெறுவது என்றோ? என்று உடலுருகினாள்.

ஆங்கே தண்காலும். இதனால் தன் ஆந்தாமை மீதுர்ந்தவாறே நாயகனோடு பரிமாறுவதற்கான தக்க இடங்களைப் பற்றி வாய்விட்டுக் கூப்பிடத்தொடங் கினாள். திருத்தண் கால், திருக்குடந்தை, திருக்கோவலூர் முதலான திருப்பதிகளைச் சொல்லிப பாடத் தொடங் கினாள். தண்கால் - குளிர்ந்தகாற்று. தண்காவிலுள்ள எம்பெருமான் குளிர்ந்த தென்றல் போலவே சிரமம் போக்குகின்ற வடிவையுடையவனாக இருப்பதனால் அத் தலத்திற்கே தண் கால் என்று திருநாமம் ஆயிற்று என்பர், பண்டு அப்பெருமான் தன்னை அணைக்கின்ற போது சிரமமெல்லாம் தீர்ந்து மிக்க இனிமையாக இருந்ததனால் மீண்டும் அங்ங்னமே ஆகவேண்டுமென்று தன்காலைப் பாடினாள்.

தண்குடந்தை ககரும் பாடி : எம்பெருமான் அமுது செய்த போனகம்சேஷயூதர்க்கு சுவீகரிக்க உரியது' என்று முறையிருக்க திருக்குடந்தை ஆராவமுத ஆழ்வார், தமக்கு ஆக்கின திருப்போனகத்தை முற்படத் திருமழிசை பிரானை அமுது செய்யப் பண்ணுவித்துப் பின்னர்த் தாம் அமுது செய்தாரென்று ஒரு மரபுப் பெருமை உண்டு. இப்படியாக, அன்பரோடு புரையறக் கலந்து பரிமாறு கிறவன்' என்று உட்கருத்துடன் (ஸாபிப் பிராயமாகத்) திருக்குடந்தையைப் பாடினாள்.