பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 பரகாலன் பைந்தமிழ்

தண்மையை (தாழ்வை) நினைத்துக் கொண்டால் வேறு

யாரேனும் ஒருவரோ இவர்' என்று ஐயுற இடம் உண்டா கின்றது - என்பதாகக் கொள்ளலாம்.

'அம்புதம் போன்றிவர் ஆர்?' என்று அவரையே முகம் நோக்கிக் கேட்க முடியாமல் தலைகுனிந்து வேறொருவரை நோக்கிக் கேட்பதுபோல் இவர் ஆர் கொல்?’ என்று நான் கேட்டேன்; அதற்கு அவரே நான் அட்டபுயகரத்தேன்’ என்று மறுமொழி கூறினர்’ என்கின் றாள் பரகால நாயகி. நான் அட்டபுயன் என்றே எம் பெருமான் மறுமொழி கூறியிருக்கலாம்; தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் இவ்வாறு ஏன் சொன்னான்? என்ற வினா பிறக்கும்; அதற்கு விடை : நான் அட்ட புயன்' என்று சொல்லிக் கொண்டால் தன்னை எம்பெரு மானாகத் தானே வெளியிட்டதாக விளங்கிவிடும். அப்படித் தெளிவாகச் சொல்லிக்கொள்ள எம்பெருமா னுக்குத் திருவுள்ளம் இல்லை; வேறு மனிதனாகப் பொய் சொல்லிக் கொள்ளவும் விருப்பம் இல்லை; ஆகவே வெகு சாதுர்யமாகச் சொல்லிக் கொள்ளுகின்றான் அட்டபுய கரத்தேன்’ என்று : “அஷ்டபுய rேத்திரத்திற்கு நான் அதிபதி' என்றதாகவுமாம். அஷ்டபுஜ சேrத்திரத்திலே கிடப்பானொருவன் நான்’ என்று சாமர்த்தியமாகச் சொல்லிக் கொண்டதாகவுமாம்.

இங்ங்ணம் இத்திருமொழி பரகால நாயகி தன் தாய்மார்க்கும் தோழிமார்க்கும் நடந்த வரலாறு சொல்லுவதாக அமைந்துள்ளது.

2. துாவிரிய மலருழக்கி (3.6) : முதல் நான்கு பாசுரங்கள் தூதுரைப்பன. இவை அடுத்த இயலில் (இயல்-19) விளக்கம் அடைகின்றன. ஏனையவை வயலாளி எம்பெருமானை நோக்கி ஆழ்வார் நாயகி தமது