பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் ←3ᎼᏘ

مس مسمی ۰۹

5. தன்னை நைவிக்கிலேன் (9.3): சென்ற திரு .ெ ம |ா ழி ேய ா டு திருமங்கையாழ்வார்க்குச் சோழ நாட்டுத் திருப்பதிகளின் அநுபவம் தலைக் கட்டிற்றா யிற்று. இனி, பாண்டி நாட்டுத் திருப்பதிகள் சிலவற்றின் அநுபவத்தில் ஆவல் கொண்டவராய் முதன்முதலாகத் திருப்புல்லாணியை அடைகின்றார். இரண்டு திருமொழி களால் இத்திருப்பதியை அநுபவிக்கின்றார். திருநாகைப் பதியின் அநுபவத்தில் வந்து புகுந்த நாயகி பாவனை ஈண்டும் தொடர்கின்றது. பிரிந்தவர்கள் இரங்குவது கடற்கரையிலே (நெய்தல் திணை) என்பது தமிழ் அகத் திணை மரபு. திருப்புல்லாணி கடற்கரையில் அமைந்த தலமாதலின் நாயகனைப் பிரிந்து வருந்தும் நாயகியின் பாசுரமாகச் செல்லுகின்றது இத் திருமொழி.

"தலைமகன் தானே வந்து கூடுவான் என்று இதுவரை ஆற்றியிருந்ததுபோதும். இருந்தவிடத்தில் இருந்து கொண்டு உருகுவதால் யாது பயன்? அவன் மன்னியிருக் கும் புல்லாணியைப் போய்த் தொழுவோம்’ என்று துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுவதாகச் செல்லுகின்றது இத்திருமொழி.

தன்னை நைவிக்கிலென்

வல்வினையேன் தொழுதும் எழு பொன்னை நைவிக்கும்

அப்பூஞ்செருந்தி மணநீழல்வாய் என்னை நைவித்து

எழில்கொண்டகன்ற பெருமானிடம் புன்னை முத்தம் பொழில்சூழ்ந்து

அழகாய புல்லாணியே (1):

6. தன்னை நைவிக்கிலேன்' என்ற பாடம் எங்கும் வழங்கி வந்தாலும் அதுசரியான பாடம் அன்று. பர்சுரத்தில் காட்டப் பெற்றுள்ள பாடமே