பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 33%

அதன் மலர்களும் மகரந்தமும் பொன்னிறமாக இருக்கு மாதலால் 'பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி’ எனப்பட்டது. "நிறமும் மணமும் நிழலும் இவையெல் லாம் உண்டாயிருக்கிறபடி. ஒரு புலன் கொண்டு ஒதுங்க நிழல் இல்லை. எல்லாப் புலன்களையும் ஈர்க்கத் தக்க திறன் வாய்ந்த தேசம். கட்புலனுக்கு நிறம், முகரும் புலனுக்கு மணம் தொடுபுலனுக்கு நிழல்' என்ற வியாக் கியானம் கண்டு மகிழத்தக்கது. 'அழகிய நிறமும் மன மும் உடைத்தான புன்னைப் பொழிலின் நிழலிலே கலந்து என் மேனி நிறத்தைக் கொள்ளை கொண்டு என்னை வெறுந் தரையாக்கிவிட்டு அகன்று போன பெருமான் உறையும் இடமான திருப்புல்லாணியைத் தொழுவோம் நெஞ்சே! புறப்படு' என்கின்றாளாயிற்று. அவன் வஞ்சக் கள்வன் மாமாயனாலே தன் காரியத்தைச் செய்தான்; நாம் சேஷ பூதராகையாலே நம் காரியத்தைச் செய்வோம் - சென்று தொழுவோம்' என்பது குறிப்பு.

இத் திருமொழியின் ஒன்பதாம் பாசுரத்திலும் அதன் தீயிகை உரையிலும் ஆழங்கால் பட்டு அநுபவித்து மகிழ வேண்டும்.

6. காவார் மடற்பெண்ணை (9.4): திருப்புல் லாணி வரை சென்று தொழ வேண்டும் என்றாள் பரகால நாயகி முன் திருமொழியில்; முயற்சி பயன்படவில்லை; கால் நடைதாராதபடி தளர்ச்சியுண்டாயிற்று. ஆகவே கண்ணிற்கண்ட பறவைகளைத் தூதுவிடுவது (2, 3 பாசுரங்கள்)?, முன்புள்ளார் நோவுபட எம்பெருமான் அவர்களுக்கு உதவினபடியைச் சொல்லுவது, உறவின இத வார்த்தைகளைக் கேளாதபடியான لا سL(که ز.) நிலைமை பிறந்தமையைச் சொல்லுவதாய்ச் செல்லுகிறது இத்திருமொழி.

7. தூதுவிடுவது_இயல் 19-ல் விளக்கப் பெற்றுள்

ளது. ஆண்டுக் கண்டு கொள்க.