பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 407

விளக்கம்: இப்போதைய நிலை பிரிவு நிலைமை. இதற்கு முந்திய நிலை கூடிக்களித்திருந்த நிலைமை; இதற் கும் முந்திய நிலை பகவத் விஷய வாசனையே தெரியாமல் அந்யபரமாகப் (வேறொன்றில் கருத்தாகப்) பொழுது போக்கின காலம்; உண்டியே உடையே உகந்திருந்த” காலம். அப்போது உடல் வாடாமல் வதங்காமல் மாமை குன்றாமல் கொழு கொழு என்றிருந்த நிலைமை. ஒருவித கவலையுமின்றி உண்டு டுத்தித் திரியுங் காலத்தில் மேனி பளபளப்புடன் ஒளிவிட்டிருக்கும். பகவத் விஷயத்தில் ஈடுபட்டது முதலாக கண நேரம் கலவியும், நெடுங்காலம் பிரிவுமாக வி ச ன ேம மீ து ர் ந் து நிற்கையாலே இப்போதைய பிரி வு த் து ன் பத் தி ற்கு முந்திய தான கலவி நிலையிலுள்ள நிறத்தைப் புகழ்ந்து கூறுதல் சிறவாதென்று அதற்கும் முந்தியதான வேறொன்றில் கருத்தாக இருந்த காலத்திலுள்ள நிறத்தை உத்தேசித் துப் பண்டு பண்டுபோலொக்கும்’ என்றதாகும். இங்கே பெரிய வாச்சான் பிள்ளையின் அழகிய திவ்விய சூக்திகள்: 'அவன் வாய் புலற்றும் நிறம் அறப்பண்டு போலேயாம்; கலக்கையாகிறது பிரிவுக்கு அங்குரமிறே; கலந்து பிரிந்து இலாபாலாபங்கள் அறியாதே பூர்ணையாயிருந்த போதை நிறம் போலேயாம்' என்பது.

மிக்க சீர்த்தொண்டரிட்ட தொண்டர், சீர்த்தொண் டர், மிக்க சீர்த்தொண்டர் என்று மூவகைப் படுவர். தொண்டு செய்வோர். கீழான பலனை விரும்பி அடிமை பூண்டிருப்பவர்கள் தொண்டர்; சிறந்த புருஷார்த்தத்தை விரும்பி அதற்கு உபாய நுஷ்டானம் போல் அடிமை பூண் டிருப்பவர்கள் சீர்த் தொண்டர்கள்; ஒன்றையும் பேணாமல் ஸ்வயம் பிரயோஜனமாகக் கைங்கரியம் செய்து கொண்டு ஒன்றையும் கருத்தாகக் கொள்ளாதவர்கள் மிக்க சீர்த் தொண்டர்கள். அப்படிப்பட்டவர்கள் சமர்ப்பித்த மலர் களின் பரிமளத்தையே இங்குப் பரகால நாயகி விரும்புவது