பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

堡忍忍 பரகாலன் பைந்தமிழ்

கால்கள் உள்ளனவாகிலும் விரைந்து செல்வதற்கு அவை பயன்படத்தக்கவை அல்லவே, சிறகாலே பறந்து செல்ல வேண்டிய சாதியாதலால். ஆகவே, "அறுகால என்ற சிறப் பிற்கு இன்சுவைமிக்க பொருள் பட்டர் அருளிச் செய்வது யாதெனில்: வண்டே! நீ எம்பெருமான் பக்கல் சென்று என் நிலையை விண்ணப்பம் செய்து அவனது அருளைப் பெற்று மீண்டு வந்தாயாகில் நீ செய்த பேருதவிக்குத் தோற்று உன் திருவடிகளை நான் தலைமேல் அணிந்து கொள்வேன்; அப்போது என்தலை நிறைந்திருக்கும்படி உனக்கு ஆறுகால் உண்டாயிருக்கப் பெற்றது. பரமபாக்கி யம்’ என்கின்றாள் என்பதாம்.'

'உள்ளுறைப் பொருளில், புருஷகார கிருத்தியம் செய்யும் பாகவதர்களே வண்டின் இடத்தில் நிற்பதால் பாகவதர்களுடைய திருவடிகள் உத்தேச்யமாகக் குறை யில்லையே."

எம்கானல் அகம்கழிவாய்

இரைதேர்ந் திங்கினிதமரும் செங்கால மடநாராய்!

திருமூழிக் களத்துறையும் கொங்கார்பூந் துழாய் முடிஎம்

குடக்கூத்தர்க்கு என்து தாய் தும்கால்கள் என் தலைமேல்

கொழுமீரோ நுமரோடே (9.7;1)

என்ற திருவாய்மொழியில் பராங்குச நாயகி தூதுவிடு வதைக் காண்க என்று மேலும் விளக்குவர் அண்ணா சுவாமிகள்.

நடுவில் வந்த நாரையிடம் பேசி அதனை அனுப்பி விட்ட பிறகு (3) மீண்டும் வண்டினை நோக்கிப் பேசுகின் நாள் ஆழ்வார் நாயகி.