பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 垒45

உடையவை. ஞானம், சக்தி பலம், ஐசுவரியம், வீரியம் தேசு போன்றவை மேன்மைக் குணங்கள் (பரத்துவ குணங்கள்); வாத்சல்யம், செளலப்பியம், செளசீல்யம் போன்ற குணங்கள் (செளலப்பியகுணங்கள்) எளிமை குணங்கள். பகவத்குணங்களை அநுபவிப்போர் சிலர் பரத்துவ குணங்களில் ஈடுபடுவர்; சிலர் சில குணங்களில் இழிவர். பலர் இரண்டிலும் ஆழங்கால் படுவர்.

பரத்துவமும் செளலப்பியமும் தனித்தனியாகக் கொண்டாடத் தகுந்தவை அன்று: பயனற்றவையே யாகும் எம்பெருமான் இந்த இருவகைக் குணங்களாலும் நிறைந்தவன். அடியாரிடம் கூசாமால் வந்து பணிவதற் கீடான எளிமைக் குணங்களாலும் குறை வற்றவன்; வந்து பணிபவர்கட்கு விருப்பங்களைத் தலைக்கட்டித் தருவதற்கீடான மேன்மைக் குணங்களாலும் குறை வற்றவன். ஆகவே, பகவானுடைய குணங்களை அநுப

விப்போருக்கு இரண்டும் பிராப்தமானவை.

இந்த ஆழ்வார் இந்த இரண்டுவகைக் குளங்களையும் பல பாசுரங்களில் அநுபவித்து மகிழ்ந்தவராயினும் இரண்டு திருமொழிகளில் விலட்சணமாக-மிகச் சிறப்பாக - அநுபவித்து மகிழ்கின்றார். இவற்றை இரண்டு வகை யாகவும் அநுபவிக்கின்றார். ஒரு திருமொழியில் (10.6) பரத்துவத்தை முன்னே பேசி செளலப்பியத்தைப் பின்னே பேசுவது இத் திருமொழி. கண்ணபிரான் திருவாய்ப்பாடி யில் களவு வழியில் தயிர் நெய் பால் முதலியவற்றை வாரி யுண்டு இடைச்சிகள் கையில் அகப்பட்டுத் தாம்பினால் கட்டுண்டு ஏங்கியிருக்கும் காலத்தில் அவனுடைய உண்மையான மேன்மையை அறிந்தவர்கள் எவ்வளவு மேன்மை தங்கிய இவன் எவ்வளவு எளிமையிலேயே இருக்கிறான்! இஃது என்ன ஆச்சரியம்?' என்று சொல்லி ஈடுபட்டபடியைத் தாமும் அநுகரித்துப் பேசுகின்றன இத்திருமொழியின் பாசுரங்கள் ஒவ்வொன்றும்.