பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 பரகாலன் பைந்தமிழ்

உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள்

உலப்பில் வலியால் அவர்பால் வயிரம் விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ அவர் நாளொழிந்த பெருமான் முனநாள் வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று

மலைபோல் அவுணன் உடல்வள் உகிரால் அனைந்திட் உவன் காண்மின், இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெய் உண்டாப் புண்டிருந்

தவனே. (3),

(உளைந்திட்டு-அஞ்சி நடு நடுங்கி, உலப்பு இல்.

எல்லையில்லாத வயிரம்-பகை: விண்னோர். தேவர்; பரவ-துதிக்க நாள்-ஆயுள் ஒழித்தட - முடித்த: வல்வாள் எயிறு-வலியவாள் போன்ற பற்கள்; அவுணன்-இரணியன்; உகிர் - நகம்?)

என்பது மூன்றாம் பாசுரம். மதுகைடவர்களை மாளச் செய்த பெருமையும், இரணியனுடைய உடலைப் பிளந்த வலிமையும் (பரத்துவ குணங்கள்) பேசி ‘'இப்படிப்பட்ட பராக்கிரமசாலி இன்று அளை வெண்ணெய் உண்டு ஆய்ச்சியரால் ஆப்புண்டிருக்கும் எளிமை என்னே?’’ (எளிமைக்குணம்) என்று ஈடுபடுகின்றார். இங்கு ஒருவர் பேச்சாகச் செல்லுகின்றது. பகவதநுபவம்,

மற்றொரு திருமொழி (11.5) ஆழ்வார் இரண்டு பிராட்டியார் நிலையை அடைந்து ஏசிப் பேசுகின்ற ஒருத்தி யின் பாசுரத்தால் செளலப்பிய குணத்தையும், ஏத்திப் பேசுகின்ற மற்றொரு பாசுரத்தாலே பரத்துவ குணத்தை யும் அநுபவிப்பதாக நடைபெறுகின்றது.

ஆழ்கடல்சூழ் வையகத்தார்

ஏசப்போய் ஆய்ப்பாடித்

தாழ்குழலார் வைத்த

தயிருண்டான் காணேடி