பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபடம் 堡垒?”

தாழ்குழலார் வைத்த

தயிருண்ட பொன் வயிறு, இவ்

ஏழ் உலகும் உண்டும்

இடமுடைத்தாய் சாழலே (3)

(ஏ.டி-தோழி! வையகம்-பூமி, ஏச - தாழ்த்திப் பேச சூழல்-கூந்தல் சாழலே-தோழி; ஆல்ஆச்சரியம்)

என்பது மூன்றாம் பாசுரம். இதில் முன்னடிகள் இரண்டும் ஒருத்தி பாசுரம், பின்னடிகள் இரண்டும் மற்றொருத்தி பின் பாசுரம். முன்னிரண்டடிகளில் செளப்பியகுணமும் பின்னிரண்டடிகளால் பரத்துவ குணமும் வெளியிடப் பெறுகின்றன.

தோழி, எங்கள் பெருமான் மிகச் சிறந்தவன், ஈருல கிற்கும் நாதன் என்றாயே, அல்து உண்மையாயின் அவன் ஒண்டொடியாள் திருமகளும் தானுமாகி (தே.பி.85.} என்றவாறு இருந்து கொண்டு மேன்மையாக விளங்க மாட்டானா? இந்த இருள்தருமா ஞாலத்தில் வந்து பிறந்தான்; தசரதசக்கரவர்த்திக்கு மூத்த மகனாகப் பிறந்தும், அரசுரிமையை இழந்து தன் மனைவியையும் கூட்டிக் கொண்டு கல்லும் முள்ளும் நிறைந்த காட்டிலே கால் நோவ நடந்து சென்றானே; மேன்மையுடையார் நிலை இதுவோ?” என்கின்றாள் ஒருத்தி.

"சகியே, ஐயோ, பரத்துவத்தில் கூடின இடத்தில் உள்ள செளலப்பியம் கொண்டாடத் தகுந்ததென்பதை அறிந்திலையே "கானமரும் கல்லதர்போய்க் காடுறைந் தான்’ என்பதை மாத்திரம் பேசுகின்றாயே யன்றி அப்படி நடந்திருவடிகளையே வானவர்கள் சென்னிக்கு மலர்ந்த பூவாகக் கொள்ளுகின்றனர் என்பதை அறிந்திலையே! விானவர்களின் தலைகளிலேயே இருக்கவேண்டிய அத் திரு