பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையநுபவம 457

(திருத்தன் - பூர்ண திருப்தியுடையவன்; நான் முகன் தந்தை திருமால், விண் - மேலுலகம்; மண்-பூவுலகம்; கண்ணுதல்-நெற்றிக்கண்ணன்; அருத்தன் - பாதிபாகத்தையுடையவன்; அரி - அரி என்ற திருநாம முடையவன்;

என்று பரத்துவ எம்பெருமானை அநுபவிக்கின்றார். இந்த எம்பெருமான் அவாப்த சமஸ்த காமனாகையிலே (பெறப்பட்ட சகல காமங்களையுமுடையவன்) எப்போ தும் திருப்தியுடையவன்; நான்முகனின் தந்தை தேவ தேவன்; மூன்று மூர்த்திகட்கும் முற்பட்ட தலைவன்; பூவுலகம், மேலுலகம் இவற்றை ஆள்பவன்; கண்ணுதலப் பனைப் பாதி பாகமாக உடையவன்; நீரிலுள்ள படமுகாக் கினி நீரெல்லாம் தன்னிடம் வந்து சுவறும்படி இருப்பது போல எல்லாப் பொருளும் தன்னிடத்திலே வந்து பொருந்துகின்ற முழு முதலாக இருப்பவன்' என்கின் நார். இங்ங்னம் பல இடங்கள்.

வியூக நிலையில் அநுபவம் : வைகுந்த விண்ண நகர எம்பெருமானை மங்களா சாசனம் செய்யும் பாசு மொன்றில்,

வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு

மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி

‘எங்கள்தனி நாயகனே! எமக்கருள்வாய்' என்னும்

ஈசன் அவன் (3. 9: 9)

(வங்கம் - மாக்கலங்கள். தடகடல் - திருப்பாசி கடல்; ஈசன் - இறைவன்)

என்று வியூக நிலை எம்பெருமானை அநுபவிக்கின்றார். "நான்முகன், சிவன் இந்திரன் முதலிய தேவர்கள் திருப் பாற்கடலில் வந்து கூடிச் செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி முதலிய மாமலர்களைப் பரி