பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையநுபவம் 465

தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு

திருக்குலத்தில் இறந்தோாக்குத் திருத்தி செய்து

(3, 4.5)

(தெவ்வாய - சத்துருக்களாகிய, குருதி-இரத்தம்; திருக்குலம் - தன் வமிசம்; திருத்தி-தர்ப்பணம்) சமதக்கினிக்கு இரேணுகையிடத்துப் பிறந்தவன் பரசு ராமன்; கார்த்தவீரியனின் புத்திரர்கள் யாகப் பசுவை நாடிச் சென்றபோது சமதக்கினியின் ஆசிரமத்திலிருந்த ஹோமதேநுவைக் கண்டு அந்த முனிவரைக் கொன்று பசுவைக் கவர்ந்து சென்றனர்; அவ்வமயம் வெளியே சென்றிருந்த பரசுராமன் மீண்டு வந்து தந்தை கொல்லப் பட்டிருப்பதைக் கண்டு rத்திரியரை வேரறுத்து இப்பழி தீர்ப்பேன்’ என்று விரதம் பூண்டு rத்திரியரையெல்லாம் கருவறுத்து அவர்களது குருதி வெள்ளங்களைப் பெரிய தடாகமாக்கி அதில் தன் பிதிர்களுக்குத் தர்ப்பணம் செய் தான் என்பது வரலாறு. இப் பரசுராமன் சீமந் நாராயண னது அவதாரமாதலால் இச் செயலை எம்பெருமான் மேலேற்றிக் கூறினார் இங்கு.

திருக்கண்ணங்குடியை அநுசந்திக்கும் பாசுரம் ஒன்றில் இந்த அவதாரம் குறிப்பிடப்பெறுகின்றது.

மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் மணிமுடி பொடிபடுத்து உதிரக் குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம்

தவிர்ந்தவன் (9. 1: 6) (மழு-கோடாலிப்படை மூஎழுகால் - இருபத் தொரு தலைமுறை; மணிமுடி - அழகிய கிரீ டம்; பொடிபடுத்து - பொடிப் பொடியாக்கி; உதிரம் - குருதி, குழுவு - கடல்; வார்புனல் - வெள்ளம்; குளித்து - தீர்த்தமாடி) ப. கா.-30