பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 பரகாலன் பைந்தமி ழ்

என்ற பாசுரப் பகுதி காண்க. கார்த்தவீரியனின் மக்கள் இயற்றிய குற்றங் காரணமாக அவர்களைக் கொன்றது. னால் கோபம் தணியப்பெறாமல் rத்திரிய வமிசம் முழுவதன் மேலும் சினங்கொண்டு உலகத்திலுள்ள அரசர் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித் திட்டு அவர்களது குருதி வெள்ளத்தைப் பெரிய ஏரியாகத் தேக்கி அதில் தீர்த்தமாடித் தம் மூதாதையருக்குத் தர்ப் பணம் செய்த பெருமான் உறையும் இடம் திருத் கண்ணங்குடி என்கின்றார். அர்ச்சையில் விபவத்தைக் கண்டு மகிழ்கின்றார்.

திருமாலின் அவதார சேஷ்டிதங்களில் ஈடுபடும் ஆழ்வார் பாசுரம் ஒன்றில் இந்த அவதாரத்தை முழுமை யாக ஒரு பாசுரத்தில் அநுசந்திக்கின்றார். இதில் வேறு இரண்டு நிகழ்ச்சிகளும் கலந்து வருகிகின்றன.

இருநில மன்னர் தம்மை இருகாலும்

எட்டும் ஒருநாலும் ஒன்றும் உடனே செரு நுத லூடு போகி அவராவி

மங்க மழுவாளில் வென்ற திறலோன் பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை

நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர் பெருநிலம் உண்டு மிழ்ந்த பெருவாய

ராகி அவர் நம்மை ஆள்வர் பெரிதே11. 4, 5 இருநிலம் - பெரிய பூமி, செரு பூசற்களம்: நுதல்-முகப்பு: ஆவி-உயிர்: மல்க-முடியும் படி யாக, மழுவாள் - கோடாலிப் படை பெருநில

மங்கை - பூமிப் பிராட்டியார்; புலமங்கை - இந்திரியங்களைக் கவர வல்ல நீளாதேவி; மலர்மங்கை - பெரிய பிராட்டியார் ; ஆள்வர் -

அடிமை கொள்வர்.1 இதில் கோடலிப் படையைக் கையில் ஏந்தியவனும் பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார் நீளாதேவி இவர்களின்