பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையநுபவம் 龛”、

பிற அவதாரங்கள்:

அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த வரலாறு: திருப்புள்ளம்பூதங்குடி எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் இன்றில் இந்த வரலாற்றை நினைந்து அநுபவித்து மகிழ்கின்றார்.

துன்னி மண்ணும் விண்ணாடும்

தோன்றா திருளாய் மூடியநாள் அன்ன மாகி அருமறைகள்

அருளிச் செய்த அமலன் {5.1:9)

!துன்னி-நெருங்கி; மண்ணும் - மண்ணுலகமும்’

விண்ணும்-விண்ணுலகமும்; மூடிய நாள்-மூடிக்

கிடந்தபோது) என்பதில் இவ்வரலாறு குறிப்பிடப்பெறுகின்றது. முன் ஒரு கல்பத்தின் முடிவில் நான்முகன் துயிலுகையில் அவன் முகத்தினின்று வெளிப்பட்டுப் புருஷ உருவத்துடன் உல விக் கொண்டிருந்தன அருமறைகள். அப்போது அருந் தவங்கள் இயற்றிப் பெருவரங்கள் பெற்ற சோமுகன் என்னும் அசுரன் அவற்றைக் கவர்ந்து கொண்டு மூவுலகங் களையும்இருள்மூடச்செய்துபிரளயவெள்ளத்தில்மறைந்து செல்ல, அதனையுணர்ந்த எம்பெருமான் ஒரு மீனாகத் திரு ஆதரித்து அப்பெருங்கடலினுட் புகுந்து அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, பின்னர் சாரத்தையும் அசாரத்தையும் பிரிக்கவல்ல அன்னமாய்த் தோன்றி நான் முகனுக்கு அந்த வேதங்களை உபதேசித்தான் எம்பெரு

துட்டன் உண்டாகிலும் இரும்பு மூட்டையைத் தாங்குவதுபோல் மிக வருத்தமாக இருக்குமாம். இந்தப் பாரத்தை நீக்குள்திற்காகல்ே எம்பெரு மான் அடிக்கடி அவதாரம் எடுக்கின்றான். இஃது அவதார இரகசியமாகும்.