பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறைய நுபவம் 晏了军

பின்னர் விரிவு பெற்ற, ஒளி-காந்தி; அனல்

நெருப்பு: மாருதம்-வாயு, விசும்பு-ஆகாயம்;

அண்டம்-பிரமாண்டம்) என்ற பாசுரத்தில் இக் கருத்தை வெளியிட்டு எம்பெரு மானை அநுபவிக்கின்றார். 'பண்டை நான்மறை, வேள்வி, இலக்கணம், இலக்கணத்தின் பொருள் காரண மாக இருந்த காரியப் பொருள், நெருப்பு, நீர், பூமி, மேகம், வாயு, ஏழு கடல், ஏழு மலை, ஆகாயம் ஆகிய இவற்றோடு கூடிய அண்டமாய் நிற்கும் எம்பெருமான்' என்று சொல்லி பெரிய பெருமாளை அநுபவிக்கின்றார் ஆழ்வார்.

திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்

செய்யும்போது உலகமாய் நின்ற எம்பெருமானை,

பல்வநிர் உடைஆடை ஆகிச் சுற்றி

பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்விமா திரம் எட்டும் தோளா, அண்டம்

திருமுடியா நின்றான் (6. 6: 3) (பவ்வம் - கடல்: உடை ஆடை - அரையில் உடுத்தும் பீதாம்பரம்; பார் அகலம்-பூமிப்பரப்பு; பவனம்-வாயு மெய்-திருமேனி, செவ்வி-அழகிய, மாதிரம்-திசை; தோள்-புயம்; அண்டம்-அண்ட பித்தி; திருமுடி-திருஅபிஷேகம்! என்று அவன் ஜகத்ஸ்வரூபியாய் இருக்கும் தன்மையை அழகிய உருவகத்தால் அநுபவித்து மகிழ்கின்றார். எங்கும் பரவி (விபு) நிற்கும் எம்பெருமானுக்குக் கடல் நீர் அரையில் உடுக்கும் பீதாம்பரமாகின்றது; பூமிப் பரப் பெல்லாம் திருவடியாகின்றது; வாயுவெல்லாம் திருமேனி யாகின்றது; எட்டுத் திசைகளும் திருத்தோள்களாகின் றன; அண்டகடாகம் திருமுடியாகின்றது. ஆக இவ் வகைகளினால் ஜகத்ரூபியாயிருக்கின்ற எம்பெருமான்