பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறைய நுபவம் 47 go

அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்

அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்

கொம்புஅமரும் வடமரத்தின் இலைமேல் பள்ளி

கூடினான் (6. 6: 1)

(அம்பரம் - ஆகாயம்; பெருநிலன் - பரந்த பூமி, கொம்பு அமரும் - கிளைகள் பொருந்திய, வடமரம் - ஆலமரம்; பள்ளிக் கூடினான் - சயனித்துக் கொண்டான்)

இதில் 'ஊழிப் பெருவெள்ளம் பரந்து உலக முழுவதையும் அழிக்கப்பட இருந்த காலத்தில் ஒன்று தப்பாமல் அனைத்தையும் திருவயிற்றினுள் வைத்தருளிப் பாது காத்து ஒரு சிற்றாலந்தளிரில் துயில் கொண்ட பரமன்' என்று திருநறையூர் எம்பெருமானை அநுபவித்து மகிழ் கின்றார். இந்த வரலாறு மிக அதிகமான பாசுரங்களில் குறிப்பிடப்பெற்றுள்ளன.

கஜேந்திரனுக்கு அருளல் : 'ஆதிமூலமே!’ என்று பெருங்குரலிட்டு அழைத்த கஜேந்திரன் என்ற யானை அரசுக்கு அருளிய செயல் பல பாசுரங்களில் அநுசந்திக் கப் பெறுகின்றன. ஒரு பாசுரத்தில் (2.10:10) வாரணங் கள் இடர் கடிந்தமால்' என்று குறிப்பிட்டு மகிழ் கின்றார் ஆழ்வார். திருக்கோவலூர் திரிவிக்கிரமனை மங்களாசாசனம் செய்யும் பாசுரமொன்றில்,

கொழுந்தலரும் மலர்ச்சோலைக்

குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாய் எவிற்றுக் கொண்டற்கு எள்கி அழுந்தியமா களிற்றினுக்கு அன்று

ஆழி ஏந்தி அந்தாமே வரத்தோன்றி அருள்செய் தானை (2.10:3)